வியர்வை இல்லை... உதறல் இல்லை... முதல் மேடையிலேயே முத்திரை பதிப்பது எப்படி?

Motivational articles
Motivational articles
Published on

ரு தொழில் அதிபர் ஒரு கூட்டத்தில் பேச அழைக்கப் பட்டார். இவருக்குப் பொதுக்கூட்டத்தில் பேசிய அனுபவம் இல்லை. ஆனால் அழைக்கப்பட்ட கூட்டத்தில் பேசினால், தன் தொழிலில் புதிய வாய்ப்புகள் வரும் என்பதை அறிந்திருந்தார்.

இந்தச் சவாலைச் சமாளிக்கத் திட்டமிட்டார். முதலில் தனது தொழில் பட்டறையில் தொழிலாளர் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். தன் தொழிலாளர்களிடம் முதலில் பேசினார். தொழிலாளர் கூட்டத்திற்கு 'மைக்' தேவையில்லை. ஆனால் தான் பேச அழைக்கப் பட்டிருக்கும் பெரிய கூட்டத்தில் மைக் இருக்கும். ஆகவே இங்கேயும் மைக் வசதி ஏற்பாடு செய்து மைக்கில் பேசப்பழகினார்.

அடுத்ததாக நண்பர்கள், உறவினர்கள் என 'தெரிந்த வட்டத்தினருக்கு' மீண்டும் ஒரு கூட்டம் கூட்டினார். இக்கூட்டத்திற்கு வந்தவர்களிடம், கூட்டம் தொடங்கு முன் நேருக்கு நேர் சில நிமிடங்கள் பேசினார். புதியவர்களை அணுகும் முறையையும் கற்றுக்கொண்டார்.

இது மட்டுமல்ல. இந்தச் சிறிய கூட்டங்கள் நடந்த பின்பு ஓரிருவரை அழைத்துத் தன் அறையில் பேசினார்.

அவரது பேச்சின் குறை நிறைகளை அழிந்து கொண்டார். இதில் மிகக் குறிப்பிடத்தக்க விசயம் என்ன தெரியுமா? பெரிய கூட்டத்தில் என்ன பொருள் குறித்துப் பேச அழைக்கப்பட்டாரோ அதையே சற்று மாற்றி அமைத்துப்பேசினார்.

பெரிய கூட்டத்தில் பேசவேண்டிய நாள் வந்த பொழுது படபடப்பு, வியர்வை, உதறல் எதுவும் ஏற்படவில்லை.

அழகாக, சுருக்கமாகப் பேசி முடித்தார். பேச்சின் முடிவில் இதுவே தனது 'முதல் மேடைப் பேச்சு என்றும் குறிப்பிட்டார். இதைக்கேட்ட கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதையும் படியுங்கள்:
'எல்லாம் முடிந்தது' என்று நினைப்பவர்களா நீங்கள்? இந்த ஒரு ரகசியத்தை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்!
Motivational articles

இன்று தொழில் தொடர்பாக எங்கே கூட்டம் நடந்தாலும் இச் சிறுதொழில் அதிபர் ஒரு பேச்சாளர். இதனால் இவரது உழைப்பு இன்னும் பயன் பெற்றது. பல புதிய தொழில் தொடர்புகள் உருவாயின.

சவாலை வெற்றி கொள்ள நாம் தீட்டும் திட்டங்கள் எல்லாம். நாம் செயல்படும் அணுகுமுறை, வேகம் ஆகியவற்றைப் பொறுத்தே வெற்றி அல்லது தோல்வியில் முடியும்' எனக் கூறுகிறார் கிளமன்ட் ஸ்டோன். சவால்களை புதிய அணுகு முறையில் வெற்றிபெற திட்டமிட்டு உழைக்கும் போது பிரச்சனைகள் அனைத்தும் பிரச்னையே இல்லாமல் தீர்ந்து போகின்றன. இதுபோல்தான் அந்த சிறிய தொழில் அதிபரும் பிரச்சனையை வெற்றிகொள்ள அவருக்கேற்ற வழிமுறைகளை அமைத்துக்கொண்டு அதில் வெற்றியும் கண்டார்.

இதேபோல்தான் ஒவ்வொருவரும் பிரச்சனைகளை சமாளிக்க அவரவர்களுக்கு ஏற்ற வழிமுறைகளை கண்டறிந்து திட்டமிட்டு கையாண்டால் வெற்றி ஒன்றும் வெகு தொலைவில் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com