ஊக்கமளித்தல் – மனிதநேயத்தின் அடையாளம்!

Motivational articles
Motivational articles
Published on

க்கமளித்தல் என்பது மனிதன் மனிதனுக்குச் செய்யும் மிக உயரிய சேவைகளில் ஒன்று. அதற்கு பணமோ, பதவியோ, அதிகாரமோ தேவையில்லை. நல்ல மனமும், நேர்மையான பாராட்டும் இருந்தால் போதும்.

இந்த ஊக்கமளிக்கும் பண்பு நம் அனைவரிடமும் இயல்பாகவே இருக்கிறது; அதை வெளிப்படுத்தத்தான் நாம் சில நேரங்களில் மறந்து விடுகிறோம்.

ஊக்கமளித்தலை நம் இல்லத்திலிருந்தே தொடங்கலாம். தினமும் சமைத்து தரும் அம்மாவின் உணவை ஒரு வார்த்தை பாராட்டினால், அது அவர்களின் அந்த நாளையே மகிழ்ச்சியால் நிரப்பிவிடும். “ரசம் அருமை” என்ற ஒரு சிறிய வாக்கியம், அவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் மிகப் பெரிய பரிசாக அமையும்.

அதேபோல், உணவகத்தில் பணியாற்றும் சர்வருக்கு புன்னகையுடன் சொல்லப்படும் “நன்றி” என்ற சொல், நாம் கொடுக்கும் சிறிய டிப்ஸை விட அதிக மதிப்புடையதாக இருக்கும். அது அவர்களின் மனதில் அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

வீட்டில் வேலை செய்பவர்களின் குழந்தைகளுக்கு கல்வியில் சிறு உதவி செய்வதும், விளையாட்டில் ஆர்வம் கொண்ட குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கித் தருவதும், அவர்களின் கனவுகளுக்கு சிறகுகள் முளைக்கச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
உழைத்துக்கொண்டே இருங்கள் ஒரு நாள் வாய்ப்பு கிடைத்துவிடும்!
Motivational articles

அலுவலகங்களில் கூட, பணியாளர்களின் உழைப்பை மனமாரப் பாராட்டினால், அவர்கள் தங்கள் வேலையை இன்னும் பொறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் செய்வார்கள்.

மேலும், கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கமளிப்பு அவர்களின் படைப்பாற்றலை பலமடங்கு உயர்த்துகிறது.

“நன்றாக இருக்கிறது”, “தொடர்ந்து எழுதுங்கள்” போன்ற வார்த்தைகள், அவர்களைத் தளராமல் முன்னேறச் செய்யும் சக்தியாக மாறுகின்றன.

ஓவியத்தில் ஆர்வம் கொண்ட ஒருவருக்கு ஒரு வண்ணப் புத்தகமோ, எழுத்தில் ஈடுபாடு உள்ளவருக்கு ஒரு நல்ல புத்தகமோ பரிசாகக் கிடைத்தால், அது அவர்களின் திறமையை மேலும் செம்மைப்படுத்தும்.

இன்றைய அவசரமான வாழ்க்கையில் நாம் பல நேரங்களில் மனிதர்களை கவனிக்க மறந்து விடுகிறோம். ஆனால், ஒரு புன்னகை, ஒரு பாராட்டு, ஒரு ஊக்கமளிக்கும் சொல்—இவை அனைத்தும் ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. சிறியதாகத் தோன்றும் இந்தச் செயல்கள், சமூகத்தில் நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும்.

இதையும் படியுங்கள்:
வெற்றிகரமான வாழ்விற்கு 'மெதுவான' நடை: ஒரு புதிய பார்வை!
Motivational articles

ஆகவே, நாள்தோறும் நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு ஊக்கம் அளிப்பதை ஒரு கடமையாக அல்ல, ஒரு இனிய பழக்கமாக மாற்றிக் கொண்டால், அது நம்மையும் மகிழ்ச்சியடையச் செய்யும்.

ஊக்கம் அளிப்பது ஒரு பழக்கமாக மாறினால், இந்த உலகம் இன்னும் மனிதநேயமிக்கதாக மாறும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com