உழைப்பின் மேன்மையும் உள்ளத்தின் தெளிவும்!

Lifestyle articles
Motivational articles
Published on

பொதுவாகவே சிலர் வசதியாக வாழ்வாா்கள் சிலர் வசதி இல்லாமல் வாழ்வாா்கள், சிலருக்கு முன்னோா்கள் சோ்த்து வைத்த சொத்துக்கள் நிறையவே இருக்கும். அதை மேலும் பல வழிகளில் முதலீடு செய்து அதை இரட்டிப்பாக மாற்றுவாா்கள்.

ஒரு சிலருக்கு அதுபோன்ற வழி தொியாமல், இருப்பது போதும் என்ற நிலைபாட்டிற்குள் இருப்பாா்கள். பொதுவாக வருவாயை பெருக்குவதற்கான வழி வகைகள் நிறையவே உள்ளது, அதை சிலர் சரியாக பயன் படுத்துகிறாா்கள், சிலர் அதை சரிவர பயன்படுத்தாமல் கோட்டை விட்டு விடுகிறாா்கள்.

அப்படிப்பட்ட சூழலில் சிலர் உழைப்பின் மேன்மையை கருத்தில் கொண்டு வருவாயை பெருக்கிவிடும் நிலையில் நாம் அவரின் முன்னேற்றம் கண்டு பொறாமைப்படவோ ஆதங்கப்படுவதோ கூடாது. மாறாக அவரால் எப்படி முன்னேற முடிந்தது என்ற விஷயங்களை நன்கு புாிந்துகொண்டு தாயக்கட்டையை உருட்டினால் வாழ்க்கை எனும் பரமபத விளையாட்டில் ஏனியானது படிப்படியாக ஏற்றிவிடும்.

மாறாக பொறாமை எனும் கட்டையை உருட்டினால் நாம் கேட்டது கிடைக்காமல் அதே பரமபத விளையாட்டின் பாம்பானது நம்மை இறக்கிவிட்டுவிடும், இதை உணர்ந்தவர்களே புத்திசாலி. அதன் வகையில் முன்னேற்றப் படிக்கட்டுகளில் கால் வைப்பவர்களே மெதுவாக படிப்படியாக முன்னேற முடியும்.

அப்படிப்பட்ட நிலையில் படிக்கட்டுகள் படிப்பினையை நமக்கு நிச்சயமாக பரிசளிக்கவும் தயங்காது இதுதான் யதாா்த்தம்.

கையில் கொஞ்சம் பணம் கிடைத்துவிட்டால் அதை செலவு செய்யும் முன்பாக பலமுறை யோசியுங்கள். அதேபோல பெருமைக்கு ஆசைப்பட்டு ஆடம்பர செலவுகளை செய்யாதீா்கள்.

அப்படி செலவு செய்துவிட்டு இருப்பதை இழந்து வறுமையில் மனக்கவலை அடைவதால் ஒரு பயனும் இல்லை. கவலைதான் மிஞ்சும். கடன் வந்து கொஞ்சும் நிலைதான் வரும்.

இதையும் படியுங்கள்:
மூளையின் திறனை மேம்படுத்தும் எளிய வாழ்வியல் மாற்றங்கள்!
Lifestyle articles

ஆக கொஞ்சம் வசதி வாய்ப்பு வரும் வேலையில் பலர் உறவாட வருவாா்கள், அவர்களின் நயவஞ்சக வாா்த்தையில் மயங்கி விடவேண்டாம். எதையும் யாாிடமும் எதிா்பாா்த்து நிற்கவேண்டாம்.

மாறாக உங்களை மதிக்கின்ற, பணத்திற்கு, அப்பாற்பட்ட நபர்களை மறக்கவேண்டாம். உங்களை உதாசீனம் செய்யும் இடத்தில் நிற்பதைவிட உங்களை எதிா்பாா்க்கும் இடத்தில் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள், அப்போது நம்மையே நமக்கு பிடிக்கும். வசதிகண்டு நிதானம் தவறவேண்டாம்.

அதே நேரம் வசதியில்லாத நிலையில் விவேகம் கடைபிடிப்பதை மறக்கவும் வேண்டாம். எப்போதும் ஒரே நிலைபாட்டில் வாழ்ந்து வருவதே நமக்கு பலவகையிலும் உதவியாய் இருக்கும் என்பதை உணரலாமே! இல்லை இல்லை உணர்ந்துதான் ஆகவேண்டும் அதுவே சிறப்பானது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com