

பொதுவாகவே வாழ்க்கையில் கோபதாபம் தவிா்த்து அன்பு எனும் விதையை ஊன்றி நல்ல நெறிமுறைகளை கடைபிடித்து வாழவேண்டும்.
அதேநேரம் பேராசை குணமும் குறையவேண்டும். சில நேரங்களில் உறவு, மற்றும் நட்பு வட்டங்களில் சிலர் தவறு செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பாா்கள்.
அங்கே கோபதாபங்கள் தொடரக்கூடாது. அப்படி கோபம் ஏற்பட்டு கடின வாா்த்தைகளை நாம் சொல்லும் நிலையில் ஈகோ காட்டாமல் மன்னிப்பு கேட்பதால் தவறேதும் வராது.
அப்படி மன்னிப்பு கேட்பதால் நாம் ஒன்றும் குறைந்து போகமாட்டோம். அதேபோல மன்னிப்பு கேட்கும் குணம் மற்றும் மன்னிக்கும் குணம் கொண்டவர்கள் வாழ்வில் தாழ்ந்து போகமாட்டாா்கள். மன்னிப்பு என்பதே வெற்றிக்கான தாரகமந்திரமாகும்.
அதேபோல பணம், பணம் என்று பைத்தியம் பிடித்து அலையும் பழக்கம் சிலரிடம் உள்ளது. வருமானம் ஈட்டவேண்டியதுதான், அதற்காக வேளாவேளைக்கு சாப்பாடு மற்றும், ஓய்வு எடுக்காமல் அலைவதால் நமது மனமும் ஆரோக்கியமும் கெட்டுத்தான் போகும். என்பதை உணரவேண்டும். அதற்குத்தான் பணத்திடம் நம்பிக்கை வைப்பதைவிட நம்பிக்கையிடம் பணத்தை போட்டு வைப்பதே நல்லது.
அதேபோல குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புாிந்து வாழும் நிலைக்கு நாம் வரவேண்டும். புாிந்து வாழ்வதால் பல வகையில் வாழ்க்கை சிறப்பாகவே முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் இறைவன் நெடுங்காலம் காத்திருப்பாா், ஆனால் கடைசியில்தான் தண்டிக்கிறாா். அதை உணர்ந்தவர்கள் தவறு செய்யமாட்டாா்கள்.
சிாிப்பு என்பது மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம், அதுஒரு பெரிய கொடையாகும், ஆக சிாித்துப்பேசி அனைவரிடமும் அன்பைப் பகிா்ந்து வாழ்வதால் தவறேதும் வந்துவிடாது. சிாித்து வாழலாம் ஆனால் அதற்கும் ஒரு வரையறை உள்ளது அளவுக்கு மீறாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாகவே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகிவிடுமே!
ஆக, எங்கும் நிதானம் எதிலும் நிதானம் கடைபிடித்தால் நல்லதுதான். பொதுவி்ல் நாம் அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழ்ந்து வந்தாலே நமக்கு அனைத்து காாியங்களிலும் வெற்றியே கிடைக்கும். அன்பு மேலீட்டால் நாம் எதிா்மறை சிந்தனைகளை வளரவிடவே கூடாது. பொதுவில் பேராசை, நிதானம், தவறுதல், சிாிக்காமல் வாழ்வது, பணதின் மீதான ஆசை போன்ற இன்ன பிறகாாியங்களில் அதிகமாக ஈடுபடாமல் பொய் பேசாமல் மனசாட்சி கடைபித்து வாழ்வதே நெறிமுறையான வாழ்க்கையாகும்!