ஸ்மார்ட் ஆக செயல்பட்டு முன்னேறுவது எப்படி?

Motivational articles
To succeed in life
Published on

வாழ்க்கையில் வெற்றி பெற கடின உழைப்பைவிட ஸ்மார்ட்டாக வேலை செய்து வெற்றி பெறும் புத்திசாலிகள் அதிகம். விரைவில் முன்னேற்றத்தை தரும் ஸ்மார்ட் வொர்க் ரகசியத்தை பற்றிய வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

S – Specific; குறிப்பிட்ட

‘நான் வாழ்க்கையில் புகழ் பெறவேண்டும்’ என பொதுவாக நினைக்காமல் எந்தத் துறையில் புகழ் பெறவேண்டும் என்பதில் ஒரு குறிப்பிட்ட இலக்கு வேண்டும். நல்ல பேச்சாளராகி அதன் மூலம் புகழ் பெற வேண்டும் என்று  நினைத்தால், அதற்கு என்னவெல்லாம் தேவை என்று சிந்திக்க வேண்டும். நல்ல பேச்சுத் திறமை, அதை உட்கார்ந்து கேட்கக்கூடிய பார்வையாளர்கள், பேச்சாளர் ஆவதன் மூலம் புகழ்பெற்ற மனிதராக முடியுமா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணவேண்டும்.

M - Measurable அடையக்கூடிய;

எடுத்தவுடன் ஒருவரால் புகழ்பெற்ற பேச்சாளராக மாற முடியாது. அதற்கென்று பல வழிமுறைகள் உள்ளன. முதலில் வாரம் ஒரு முறை நண்பர்கள் முன்பு அல்லது உறவினர்கள் முன்பு பேசிக்காட்டலாம். பேச்சின் முடிவில் ‘நான் எதில் தவறு செய்கிறேன்? என்னுடைய உச்சரிப்பு சரியாக இருந்ததா? கருத்துக்களை தெளிவாக எடுத்து வைத்தேனா? என்கிற கேள்விகளை கேட்டு, அவர்கள் கூறும் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். உங்கள் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கவும்.

A – Achievable அடையக்கூடிய;

அடுத்த மாதம் ஆயிரம் பேருக்கு முன்னால் பேசவேண்டும் என்கிற ஒரு இலக்கை மனதில் நிர்ணயித்துக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன்பு ஒரு சிறு கூட்டத்தின் முன்பு பேசி பழகவேண்டும் தினமுமே 5 நிமிடங்கள் ஒதுக்கி தனியாகப் பேசி, பின்னர் நான்கு பேர் முன்பு, பத்துப் பேர், நூறு பேர் என பார்வையாளர்களை அதிகரித்து கொண்டு செல்லலாம். அதன் பின்பு ஆயிரம் பேர் கொண்ட பார்வையாளர்களை எதிர்கொள்வது சுலபமாக இருக்கும். இதனால் இலக்கு எளிதில் அடையக்கூடியதுதான் என்ற நம்பிக்கை பிறக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்க மனசை இரும்பு மாதிரி மாத்தணுமா? இந்த வழிகளைப் பின்பற்றுங்கள்!
Motivational articles

R – Relevant; தொடர்புடைய

‘ஏன் ஒரு புகழ்பெற்ற பேச்சாளராக வேண்டும் என்று விரும்புகிறேன்?’ என்கிற கேள்வியை கேட்டால் ‘யாருக்கும் தெரியாமல் பத்தொன்று பத்தோடு பதினொன்றாக இருப்பதைவிட சமூகத்தில் ஒரு உயர்ந்த அந்தஸ்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் பேச்சாளராக விரும்புகிறேன்.” என்று நீங்கள் செய்யும் செயலுக்கும் உங்களது குறிக்கோளுக்கும் இடையே ஒரு தொடர்பு அவசியம் இருக்கவேண்டும் அப்போதுதான் அது வெற்றி அடையும்

T - Time-bound காலக்கெடு

பேச்சாளராக வேண்டும் என்கிற ஆசையையும் குறிக்கோளையும் மட்டும் வைத்துக்கொண்டு இராமல் எத்தனை நாட்களுக்குள் தன்னுடைய குறிக்கோளை அடைவது என்பதில் தெளிவுவேண்டும். ‘அடுத்த ஒரு வருடத்திற்குள் அல்லது ஆறு மாத காலத்திற்குள் என்னுடைய பேச்சுத் திறமையை வளர்த்துக் கொண்டு நான் சிறந்த பேச்சாளராக மாறுவேன்’ என்று ஒரு காலக்கெடு வைத்துக் கொண்டால்தான் அதற்கு ஏற்றார் போல செயல்பட முடியும். காலக்கெடு தினமும் பயிற்சி செய்ய வைத்து இலக்கை நோக்கி செயல்படுத்த வைக்கும். அதில் வெற்றியும் பெறவைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com