உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும் 7 பாயிண்டுகள்!

 boost your self-confidence
Motivational articles
Published on

ருவரின் வாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டுவது தன்னம்பிக்கை தான். தன்னம்பிக்கை மட்டுமே வாழ்க்கையை வல்லமை கொண்டது. தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனிதன் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. 

நம் மனதில் தன்னம்பிக்கை வளரவேண்டும் அப்படி இருந்தால்தான் நாம் எதையும் சாதிக்க முடியும். அந்த தன்னம்பிக்கையை எப்படி நாம் வளர்த்துக் கொள்வது. இதோ மிக எளிமையான ஏழு பாயிண்ட்கள் இப்பதிவில்.

1-நீங்கள் உங்களை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நேசிக்க ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குள் தன்னம்பிக்கை வேரூன்றும். விரைவாகவே அதன் பயனை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். எந்திரம்போல் எப்போதும் வேலை, வேலை என்று அலையாமல் உடலுக்கும். உள்ளத்திற்கும் சற்று ஓய்வு கொடுத்து உங்களை நேசிக்கத் தொடங்கினால் மனதில் உற்சாகம் தோன்றி அமைதியும், தன்னம்பிக்கையும் ஏற்படும்.

2. உங்கள் மேனியழகு, உங்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கையை முழுமையாக மலரச்செய்யும். அதற்காக தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள். இனிப்பு பலகாரங்கள், கொழுப்புச்சத்துள்ள எண்ணெய் பலகாரங்களை தவிர்த்து புரோட்டீன் சத்துமிதமாக உள்ள உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இரவில் நன்றாக தூங்குங்கள்.

3. உங்கள் முகத்திற்கும், மேனிக்கும் பொருத்தமான அழகு சாதன பொருட்களை மிதமாக பயன்படுத்துங்கள். அழகு உங்களை மகிழ்ச்சி நிறைந்தவராக மாற்றும்.

4. உங்களிடம் உள்ள சின்னஞ்சிறு குறைகளை பிறர் சுட்டிக்காட்டும் முன்பு நீங்களே அறிந்து, அவைகளை அகற்றும் வழிகளை ஆராய்ந்து வெற்றி காணுங்கள். உங்கள் தோல்விகளை ஒப்புக்கொள்ள வெட்கப் படாதீர்கள். இப்படிச் செய்தால் தடைக்கற்கள் படிக்கட்டுகளாக மாறுவதை உணர்வீர்கள். வெற்றியின்

5. உங்கள் சொந்த வாழ்க்கை, தொழில், வியாபாரம், பணத்தேவை போன்ற அனைத்தையும் பற்றி முதலிலே ஒரு செயல்திட்டம் வகுத்து விடுங்கள். அதற்கு தக்கபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் எதிர்காலம் வளமாக அமையும். வளமான வாழ்க்கை தன்னம்பிக்கையை வளர்க்கும்.

இதையும் படியுங்கள்:
நம்பிக்கை ஒன்றே செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, மூன்றையும் தரும்!
 boost your self-confidence

6. வாழ்க்கை எப்போதும் அமைதியாக ஓடவேண்டும் என்று நினைக்காதீர்கள். சில செயல்களில் டென்ஷன் ஆனாலும் பரவாயில்லை. கொஞ்சம் 'ரிஸ்க்' எடுங்கள். ரிஸ்க்கான விஷயங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றிவாகை சூடும்போது உங்களிடம் தைரியம் பிறக்கும்.

7. உங்களை நீங்கள் நம்புங்கள்...! உங்கள் மீது நீங்கள் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளாமல் எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் திறமையை நீங்களே நம்பாவிட்டால் வேறு யார் நம்புவார்கள்? நம்பிக்கையே உங்களின் திறமைக்கும், செயல்திறனுக்கும் சரியான அஸ்திவாரம்...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com