அனுபவம்தான் என்றும் கை கொடுக்கும்..!

உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது.
Experience always helps..!
motivational articles
Published on

ந்த  நிறுவனம்  சில வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு வளர்ந்து வருகின்றது. போட்டிகள் நிறைந்த சூழ்நிலையில் தொழிலை விரிவுப்படுத்த கடுமையான உழைப்பும் தேவையாகின்றது.

அந்த நிறுவனத்தின் தலைவர் அவ்வளவு அனுபவம் இல்லாதவர்.  அவரது  தந்தை போதிய பண வசதி கொடுத்து ஊக்குவித்தார். 

தொழில் தொடங்கும்பொழுது  தந்தை மகனிடம் கூறினார், " தொழில் முன்னேற,  சிறக்க ஒரு அனுபவஸ்தர் துணையும்,  உதவியும் தேவை. எனவே என் நண்பரை உன்னுடன் வைத்துக்கொள். முக்கிய மீட்டிங்குகளுக்கு அல்லது சந்திக்க செல்லும்பொழுது அவரது ஆசோசனையை பின் பற்றவும். அவர் அதிகம் பேசமாட்டார், கூர்ந்து கவனித்து புரிந்துக்கொண்டு, மனதில் அலசி சிறப்பான முடிவு தருவார். பெரும்பாலும் அவை நன்மை பயக்கும்!", என்று அவர் நண்பர் பற்றி விலாவாரியாக விவரித்து மகனை வாழ்த்தி தொழில் துவக்கி வைத்தார்.

சமீபத்தில்  ஒரு  பெரிய நிறுவனத்தில் குறிப்பிட்ட தொழில் செய்ய வாய்ப்பு வந்தது. டெண்டருக்கு தேவையான விவரங்களுடன்  இவர்களது கொட்டேஷனையும் அனுப்பி வைத்தனர். பலர் அப்ளை செய்து இருந்தபொழுதும் இவர்களது நிறுவனம் கடைசி இறுதி நேர்முக மீட்டிங்கிற்கு தேர்வானது.

நிறுவனரும், அந்த அனுபவஸ்தரும் மீட்டிங்கில் கலந்து கொண்டனர். அந்த அனுபவஸ்தர் தானே பேசிக்கொள்வதாக கூறிவிட்டார். மீட்டிங்கில் எதிரும், புதிருமாக (opposite) அமர்ந்திருந்தனர்.

ஒவ்வொரு பக்கமும் தலா இரண்டு நபர்கள். சில தகவல்கள் கேட்கப்பட்டன. அவற்றை கொடுத்து விளக்கம் அளித்தார் அந்த நபர்.

இதையும் படியுங்கள்:
அலுவலகத்தில் அதிக நண்பர்களைப் பெறுவது எப்படி?
Experience always helps..!

அவர் வந்து அமர்ந்ததிலிருந்து, முக்கிய முடிவு எடுக்க வேண்டியவர்  அவர் எதிரில் இருந்த லாப் டாப்பில் எப்படி கவனம் செலுத்துக்கிறார் என்பதையும்,  அவர் கண்கள் இப்படியும், அப்படியும் நகர்த்தி பார்த்துவிட்டு சிறிது நேரம் கவனித்துவிட்டு இவர்களிடம் உரையாடினார், என்பதையும் கவனித்து மனதில் நிறுத்திக்கொண்டார்.

அந்த பெரிய நிறுவனத்தின்  நபர், "நீங்கள் டெண்டர் கொடேஷனில்   குறிப்பிட்டுள்ள மதிப்பை (amount quoted in the tender document) தவிர வேறு என்ன செய்யமுடியும்!", என்ற வினாவிற்கு, அனுபவஸ்தரிடம் இருந்து வந்த பதில் அந்த குறிப்பிட்ட தொழிலைப்பெற பெரிதும் உதவியது.

விடை பெற்றுத் திரும்பும் பொழுது ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியில் இருந்த நிறுவனர் கூறினார்,  "கடைசியில் அவர் கேட்ட கேள்விக்கு உடனடியாக டெண்டர் மதிப்பை விட 15℅  குறைத்துக் கொள்வதாக ( discount) எந்த அடிப்படையில் கூறினீற்கள்",  என்றார் வியப்போடு.

அனுபவஸ்தர் கூறினார், " வளர்ந்து வரும் நம் போன்ற நிறுவனங்களுக்கு இந்த புகழ்பெற்ற நிறுவனத்தில் ஆர்டர் வந்தால் நமது நிறுவனத்தின் மதிப்பு உயரும். அதுமுக்கியம்.

முடிவு செய்ய வேண்டியவர் தனது லாப் டாப்பில் இறுதியாக இருந்த நான்கு நிறுவனங்களின் (நமது உட்பட) விவரங்களை பதிவு செய்து இருந்தார்.

அவர் லாப் டாப்பை பார்க்கும் பொழுது அவர் கண்கள் அசைவு, நகர்விலிருந்து புரிந்து கொண்டேன். நம் நிறுவனத்தை விட வேறு ஒரு நிறுவனம் குறைந்த மதிப்பிற்கு  தொழிலை செய்ய டெண்டர் அளித்துள்ளார்கள் என்பதை. எனவே 15℅ டிஸ்கவுண்ட் என்றேன்.

தொழில் செய்வதில் சரியான நேரத்தில் விட்டு கொடுப்பது என்பது முன்னேற்றத்திற்கான முக்கிய படிக்கல் என்று முடித்தார்.

 நிறுவனர் தந்தை கூறியபடி இந்த அனுபவஸ்தரை உடன் வைத்துக் கொண்டதன் பலனை உணர்ந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com