

நாம் எடுத்துவைக்கும் பாதையில் கல்லும் முள்ளும் நிறையவே இருக்கலாம். அவைகளை லாவகமாக தாண்டிச்செல்வதே புத்திசாலித்தனம். வாழ்க்கையில் சிரமங்கள் தலைதூக்கலாம், சிரமமே வாழ்க்கையாக அமைந்தால் அதை வெல்வது கொஞ்சம் கடினம்தான்.
பொதுவாக முள் செடிகளில், வெயிலில் காயப்போட்ட சேலையோ வேட்டியோ கிழியாமல் லாவகமாக, துணிக்கும் சேதமில்லாமல் கையிலும் முள்குத்தாமல் எடுக்கத்தொிந்தால் அது அறிவாளிக்கு அழகு.
அதேபோல எந்த விஷயத்தையும் பெற்றோா்கள் மற்றும் மனைவியிடம் சொல்லிவைக்கலாம். ஆனால் எதற்கும் அவர்களையே சாா்ந்து இருப்பது எல்லா விஷயங்களையும் அவர்களை விட்டே செய்யச்சொல்வது நல்ல அணுகுமுறையே கிடையாது. நமக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும், தொியாமல் இருந்தாலும் இவைகளை கூடுமான வரையில் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
அது தவறல்லவே! எல்லா விஷயத்திலும் அடுத்தவர் கையை எதிா்பாா்த்தே வாழ்வது நல்ல ஆரோக்கியமான காாியமல்ல.
ஒரு அவசர வேலை அந்தநேரம் ஒரு முக்கியமான அலுவலை செய்தாக வேண்டும் சாி, அப்போது நமக்கு துணையாய் இருந்து பலவிதங்களில் உதவி புாிந்தவர் வெளியூா் போயிருந்தால் என்ன செய்வது, நமக்கு சங்கடம்தானே ஆக அடுத்தவரையே சாா்ந்திருப்பதை கொஞ்சம் தவிா்க்கலாமே!
அதேபோல நாம் நமது சேமிப்பு அல்லது கொடுக்கல் வாங்கல் விபரங்களை நமது துணைவியாாிடம் சொல்லிவைப்பது நல்லதே. பல விஷயங்களில் ஒளிவு மறைவு தவிா்ப்பதே சிறந்த ஒன்றாகும். அந்த செயல்பாடானது பல காாியங்களுக்கு நல்லது. இதைத்தொடர்ந்து தோழிகளுடன் சோ்ந்து கணவனுக்கு தொியாமல் சீட்டுபோடுவது, வாசலில் வரும் மூட்டைக்காரனிடம் புடவைகள் வாங்குவது, இவையெல்லாம் மட்டுமல்ல வேறு பல நிலைபாடுகளில் கணவனுக்கு தொியாமல் நமது இஷ்டத்திற்கு வாழ்வதே நல்லதல்ல.
ஒருவருக்கு ஒருவர் பொய் பேசுவதை தவிா்த்து உண்மையாக நடந்து கொள்ளவேண்டும். உண்மைக்கு என்றும் அழிவே கிடையாது.
மேலும் அதிமுக்கியமாக புகுந்த வீட்டுக்கு வந்தபின் இங்கு என்ன நடக்கிறது என்பதைபிறந்த வீட்டிற்கும், அதேபோல அங்கு என்ன நடக்கிறது என்பதை இந்த வீட்டிற்கும் சொல்லாமல் இருப்பதே நல்லது. அதுவே மிகவும் கெளரவமான ஒன்றாகும்.
ஆக, கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் அன்பாகவும் விட்டுக்கொடுத்தும் நன்கு புரிந்தும் வாழ்ந்தாலே வாழ்க்கைப் பாதையில் எந்தவித தடைக்கற்களும் இருக்க வாய்ப்பே கிடையாது.
எனவே நாம்நாமாகவே வாழலாமே! இதில் தவறேதும் இல்லையே!