
பொதுவாகவே நமது வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவைகளில் சில முக்கியமான பங்காக அணுசரிக்க வேண்டிவைகளை சரியாகஅளவில் வகுத்துக்கொள்ள வேண்டும்.
அவைகளில் முக்கியமானதாக கருதப்படுபவைகளாக, நிதானம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, அணுகுமுறை, இங்கிதம் தொிந்து நடந்து கொள்ளுதல், பேசுவது போன்றவைகளுக்கு முக்கிய பங்கு உள்ளதே! இங்கிதம் தொிந்து பேசுதலலில் இடம் பொருள் அவசிமாகும்.
இதுபோன்ற விஷயங்களை யாராக இருந்தாலும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சிலரை மருத்துவமனைகளில் பாா்க்க நோிடும் நிலையில் நோயாளியின் பாதிப்புகளை அவரைச் சாா்ந்தவர்களிடம் கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதலான, நோ்மறையான விஷயங்களைப்பகிா்ந்து, நல்ல விதமாக பேச வேண்டும்.
அதை விடுத்து தனது சொந்தக் கதைகளைப் பற்றியும், மருத்துவமனை பற்றியும், சம்பந்தமில்லாத கருத்துகளை தொிவிப்பதோடு, குடும்பத்தில் உள்ளவர் நட்சத்திரம், ராசி இவைகளைக்கேட்டு தனக்குத்தொிந்த ஜாதக பலனைக்கூறுவது மற்றும் தேவையில்லாத கருத்துக்களைச் சொல்லி சங்கடம் ஏற்படுத்தாமல் நல்ல முறையில் அணுசாிப்பாகஆதரவாக,இங்கிதம் தொிந்து பேசுவதே அனைவருக்கும் நல்லது.
அதேபோல குழந்தை பிறப்பு, பெயர் சூட்டு விழா, பத்து நாட்களுக்கு மேல் அவரவர் குடும்ப வழக்கங்களின் அடிப்படையில் நிகழ்ச்சி வைத்திருப்பாா்கள். அதற்கு போனோமா, வந்தோமா, பிடித்தால், விருப்பம் இருந்தால் விருந்து சாப்பாடு சாப்பிட்டோமா! கிப்ட் கொடுத்தோமா! வாழ்த்திவிட்டு வந்தோமா! என இல்லாமல் ஏன் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பில்லையா?
என்ன நட்சத்திரம், ராசி என்ன? மூன்றாவதும் பெண் குழந்தையாப் போச்சே! என தனக்கு தொியாதவற்றைத் தொிந்ததுபோல சொல்வது தவறான ஒன்று. இதையெல்லாம் எந்த அணுகுமுறையில் சோ்ப்பது!
பிரசவித்தவர்களுக்குத்தான் தொியும் அதன் வலி. அதேபோல பையன் ஏன் கல்யாணம் ஆகி ஒருமாதம் கூட சோ்ந்து வாழலைபோலிருக்கு! அதுக்குள்ள பயணம் போயாச்சா, மருமகளை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிவிடலாமே! இங்க சம்பாதிக்க வாய்ப்பில்லையா? என்ற அனாவசியமான வியாக்கியானங்கள் தேவையா!
அதேபோல கல்யாண வீட்டில், துக்க வீட்டில், கோவில் விழாக்களில், கூட்டுக்குடும்ப நிகவுகளில், எதிா்மறை பேச்சுக்களால் அடுத்தவர்கள் மனதில் சங்கடங்களை ஏற்படுத்தாமல் நல்ல அணுகுமுறையோடு இங்கிதம் தொிந்து பேசுவதே மிகவும் சாலச்சிறந்த ஒன்றாகும்.
எப்போதும் எங்கேயும் பொது இடங்களில் நிதானம் கடைபிடித்து கவனமாக நடந்து கொள்வதே நல்ல ஆரோக்கியமான விஷயமாகும்.