பயத்தைக் கண்டு பயந்து ஒதுங்குவது சரியா?

Is it okay to shy away from fear?
Motivational articles
Published on

னிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும் அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்னையாக எடுத்துக்கொள்வது, பயம் கொள்வது எல்லாம். ஏதாவது ஒன்றைப் பற்றி அனைவருமே தினம் பயப்படுகிறோம். நாம் நேசிக்கப்படாமல் போய்விடுவோமோ, தனிமை பயம், மரண பயம், வெற்றி பெறுவோமா என்ற பயம், பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக தோன்றும் பயம், பிறர் நம்மை என்ன நினைப்பார்கள் என்றெண்ணி பயம் கொள்வது என்று பல வகையான பயங்கள் ஏற்படுகின்றன.

இவற்றில் சரி செய்யக்கூடிய பயங்கள் என்றும், மனதின் ஆழத்தில் மிகவும் ஆழமாக பதிந்து வேரூன்றிய பயங்கள் என்றும் இரண்டு வகைகள் உள்ளன.

பயத்தைக்கண்டு பயந்து ஒதுங்குவது தவறு. மனதின் ஆழத்தில் வேரூன்றிய பயங்கள் மரபு வழியாகவும் வந்திருக்கலாம். காரணத்தை கண்டுபிடிக்க முடியாத, அதே சமயம் மனதில் ஆழமாக பதிந்துள்ள அச்சங்களை தகுந்த மருத்துவரிடம் சென்று சரி செய்து கொள்ளலாம். நம்மை பிறர் நேசிக்காமல் போய்விடுவார்களோ என்ற பயம் ஏற்பட காரணம் ஒரு குழந்தைக்கு பாதுகாப்பு தேவைப்படுவதுபோல் மூளைக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது. அவ்வளவுதான்.

எதையாவது ஒன்றை எப்போதும் சார்ந்து இருப்பதுதான் பயத்தின் காரணிகளில் ஒன்றாகும். பகுத்தறிவற்ற பயங்கள், உயிர் வாழ்வதற்கான பயங்கள் ஆகியவற்றைக் கையாள தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் எல்லாம் பயத்துக்கே பயம் காட்டுபவர்கள் என்று மார்தட்டுபவர்கள் கூட உள்ளுக்குள் பயப்படுபவர்கள். பயத்தை ஒரு பிரச்னை என்று சொல்வதே தவறுதான். இதிலிருந்து விடுபட முயற்சிப்பதே சரியாகும்.

இதையும் படியுங்கள்:
வெற்றியாளர்கள் கடைபிடிக்கும் 7 விஷயங்கள்!
Is it okay to shy away from fear?

பயத்திற்கு காரணம் அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாத நிலைதான். சிலர் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவார்கள். ஆபத்து ஏற்பட போகிறது என்ற எண்ணம் உள்ளுக்குள் தோன்றினால் பயம் என்பது இயல்பாகவே வந்துவிடும். இது கவலை, அச்சம், பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என்று வெவ்வேறு வகைகளில் வெளிப்படும். மொத்தத்தில் பயம் என்பது நம் மன ஓட்டம் மட்டுமே. விபரீத கற்பனையால் விளைவதுதான். ஆபத்து என்பது கட்டாயமாக இருப்பது என்று எடுத்துக் கொண்டாலும் கூட பயம் என்பது எப்போதும் தவிர்க்க கூடிய ஒரு உணர்வுதான்.

பயத்தைக்கண்டு பயந்து ஒதுங்குவது நம்முடைய செயல்களில் முடக்கத்தை ஏற்படுத்தும். பயம் அதிகமானால் கை கால்களில் நடுக்கம் ஏற்படும். எந்த உருப்படியான செயல்களையும் செய்யத் துணியாது. பயமில்லாத மனிதர்கள் உண்டா? பயம் என்ற உணர்வு மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா வகை உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமானது. அதுதான் நம்மை ஆபத்தை நோக்கி நகரவிடாமல் காக்கும். பயம் அவசியமே; ஆனால் அதீத பயமும் அதனால் ஏற்படும் செயல் முடக்கங்களும்தான் பிரச்னையே!

இதற்கான தீர்வு என்னவென்றால் முதலில் நாம் பயத்தை அடையாளம் கண்டு கொள்வதும், அதிலிருந்து வெளிவர நேர்மறையான விளைவுகளை கற்பனை செய்து பார்க்கவும் வேண்டும். பயத்தை எதிர்க்கொள்ளவும், அமைதியாக இருக்கவும் பயிற்சி பெறலாம். ஆழ்ந்த சுவாசம் நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிறந்த பயிற்சியாகவும், எண்ணங்களை ஒருமுகப்படுத்தவும் உதவும். ஒருமுகப்படுத்தி சிந்திக்க நம் பயங்கள் காணாமல் போகும்.

நம் பயம் என்னவென்று கண்டறிந்து அதை கடந்து செல்ல முயற்சிப்போமா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com