வாழ்க்கை ஒரு வரம்: வாழக் கற்றுக்கொள்ளுங்கள்!

Learn to live!
Motivational articles
Published on

வாழ்க்கை எனும் பாதை கரடுமுரடானது. சுயநலம், வஞ்சகம் பொறாமை எனும் மேடு பள்ளம் கொண்டது. அந்த பாதையை நீ சுலபமாக கடந்துதான் ஆகவேண்டும். விழுந்து விடுவேன் என அச்சம் கொள்ளாதே! விழு பரவாயில்லை விழுந்த இடத்திலிருந்து நீயே முயற்சி செய்து எழு.

தோல்வி நிலையில்லாதது. பொய்யாக பெறும் வெற்றி ஒருபோதும் நிலைத்திராது. அன்பை செலுத்து, ஆணவத்தை குறை, இயல்பான வாழ்க்கையை நேசி, அதன் தன்மையை சுவாசி. சாதிக்கப் பிறந்தோம் என்ற வைராக்கியம் கொள், இலக்கை நிா்ணயம் செய், விடாமுயற்சியை கைவிடாதே!

தேவையில்லா விவாதம் வேண்டாம். நல்லதையே நினை, நல்லதையே செய், யாருக்கும் தீங்கு நினைக்காதே! பொியவர் சொல் கேட்டு நட, இறைவழி நாடு, யாரையும் ஏளனம் செய்யாதே!

பொய் எனும் கவசத்தை அணியாதே! உண்மையை பேசு, அறநெறிதவறாதே ஆற்றில் போட்டாலும் அளந்துபோடு.

உழைப்பின் தன்மை அறிந்து பாடுபடு, அடுத்துக் கெடுக்காதே, இலவசம் நாடாதே, இயல்பாய் வாழ்ந்துவா இரட்டை வேடம் வேண்டாம், எதையும் தாங்கும் இதயம் கொள்.

இரக்கம் காட்டு, இயலாது, முடியாது எனும் வாா்த்தை தவிா். வாதம் மருந்தால் தீரும், பிடிவாதம் தீர மருந்தில்லை, அதர்மம் கடைபிடிக்காதே தர்மம் செய்ய மறவாதே.

மன்னிக்கக் கற்றுக்கொள், யாரையும் எள்ளி நகையாடாதே, தாய் தந்தையை கண்ணின் இமைபோல நடத்து, ஏளனம் வேண்டாம், ஏற்றம் குறைந்துவிடும்.

நன்றி மறக்கவேண்டாம், நம்பிக்கை துரோகமும் வேண்டாம், எதையும் சாதிக்கப் பிறந்தவனாய் மாறு, ஓடு நில்லாதே ஓடு, உறுதியுடன் எடுத்த காாியம் முடி, இமயமலை வெகுதூரத்தில் இல்லை.

இதையும் படியுங்கள்:
நிம்மதியான உறக்கமும் நிறைவான மனநிலையும்: ஒரு பார்வை!
Learn to live!

நட்பை வளர்த்திடு, நல்ல நட்பைத்தான் வளா்க்க வேண்டும், மாறாக கூடா நட்பின் மாயவலையில் மாட்டாதே. அச்சம் தவிா், அறநெறி தவறாதே! பிறன்மனை நோக்கவேண்டாம். சகோதரத்துவம் வகுத்திடு, நோ்மறை சிந்தனை நம் உயிா், எதிா்மறை சிந்தனை தவிா்.

பிறர் துன்பம் கண்டு சந்தோஷம் வேண்டாம், வாழ்க்கையை நல்ல விதத்தில் வாழக்கற்றுக்கொள், பிறரை ஏமாற்றி வாழாதே, வாழ்ந்து கெட்டவரை வஞ்சிக்காதே. ஆணவம் தவிா்த்திடு, அகம்பாவம் தொலைத்திடு, நாளை என்ன செய்யலாம் என சிந்திக்க தவறாதே!

இலக்கில்லா வாழ்க்கை விளக்கில்லா வீடுபோல. நல்வர்களை நேசி, நஞ்சு கலவாமல் நயமாய் பேசு, தீங்குசெய்யவேண்டாம் அன்னதானம் கைவிடாதே! ஆண்டவன் துணையிருப்பான்,ஆடும் வரை ஆடாதே பேராசை தவிா்த்திடு, எதையும் கொண்டுவரவில்லை எதையும் கொண்டுபோகமுடியாது. தத்துவம் உணர்ந்திடு அனைவர்க்கும் பொதுவாய் வாழ்ந்திடு.

தர்ம நெறி தவறாமல் வாழ்வதே தலைசிறந்த ஒன்றாகும். வாழ்க்கை இலகுவானதல்ல. இலக்கிருந்தால் எதையும் வெல்லலாம் வென்று பாா் வசந்தம் வருவதே உறுதி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com