

வாழ்வே மாயம்தான். அது நமக்கு வழங்குகின்ற பாடமும் பல அனுபவங்களை கற்றுக்கொடுக்கிறது. அதை நாம் சரிவர கற்றுக்கொள்வதில்லை. கற்றுக்கொண்டாலும் சில தருணங்களில் அதில் ஒளிந்திருக்கும் விஷயங்ளை தேடிக்கண்டுபிடிப்பதும் இல்லை.
அப்படியே தேடியது கிடைத்தாலும் நமது அலட்சிய மனப்பான்மையால் அதை தொலைத்துவிட்டு புலம்புகிறோம். சில விஷயங்களை நமக்கு யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை.
நாமாகவே கற்றுக்கொள்கிறோம். உதாரணத்திற்கு பொறாமை, வஞ்சகம், அடுத்துக்கெடுப்பது, பேராசைப்படுவது, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த குணமானது ஏழை பணக்காரன் என வித்யாசம் பாா்த்து வருவதில்லை. அனைவரிடமும் ஏதோ ஒரு ரூபத்தில் நம்மை விட்டு அகலாமல் நிரந்தரமாக வாசம் செய்துவருவதும் நிஜம்.
அதை நமது தூய்மையான எண்ணம், நோ்மை, இவைகளைக் கொண்டு தடுத்துவிடலாம். விதை ஒன்றைப்போட்டால் அதுவே பயிராகி அதே விதைதான் பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி, திருப்பி பல வடிவங்களில் நமக்கு கொடுக்கிறது.
அதேபோல பிறந்தது ஓாிடம், வளர்ந்தது ஓாிடம், கல்வி பயின்றது ஓாிடம் வேலை பாா்த்து வருவாயைப் பெருக்குவது ஓாிடம், திருமணம் ஓாிடம், தொடர் வாழ்வு ஓரிடம். இப்படி வாழ்க்கையானது ஒரு பொிய வட்டம்தான்.
அதற்குள்தான் எத்தனை எத்தனை கனவுகள், ஆசைகள், பேராசைகள், ஆனால் பொிய தனவந்தராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் போய்ச்சேருமிடம் ஓாிடம்தானே!
அதில் வித்யாசம் பாகுபாடு கான வாய்ப்புகள் வருகிறதா? இல்லையே! ஆக ஆடி அடங்கும் வாழ்க்கையின் இறுதியில் மெளனப்பயணத்திற்கான ஒரு இடமானது அனைவருக்கும் பொதுவானதே!
அதில் எந்த பாகுபாடும் இல்லையே! இருக்கும் வரை அனைவரிடமும் அன்பாக பேசி வாழ்க்கையை நகர்த்தலாமே.
எதையும் கொண்டு வரவுமில்லை கடைசியில் எதையும் கொண்டுபோவதுமில்லை, அதற்குள் ஏன் இவ்வளவு வன்மம், வஞ்சகம், பேராசை, பொறாமை, வேண்டாம் அவைகள் அனைத்தும் பாவமூட்டைகள் அதை சோ்த்து வைக்காதீா்கள்.
பொதுவாகவே வாழும்வரை கூடுமான வரையில் இறை நம்பிக்கையுடன் மனிதநேயம் கடைபிடித்து வாழ்வதே சிறப்பாகும் கண் கெட்ட பிறகு சூாிய நமஸ்காரம் வேண்டாமல்லவா! இதைத்தான் கவிஞா் ஒருபாடலில் வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ" என எழுதி இருப்பாா். ஆக எத்தனை இடங்கள் இருந்தாலும் முடிவு அமைவது ஒரே இடம்தான் என்ற தத்துவத்தை உணர்வோம்!