

வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய பல நல்ல விஷயங்கள் உள்ளன. சில விஷயங்களில் நாம் புத்திசாலித்தனமாக இருந்தாலும் சில சமயங்களில் நமக்கு தொியாமலேயே நோ்மறை, மற்றும் எதிா்மறை, சக்திகளும் நம்மோடு, நமது வாழ்க்கையோடு வந்து வந்து போவதும் இயல்பான ஒன்றுதான். அனைத்து வகையான நல்ல பலன்களுக்கும், கெட்ட பலன்களுக்கும், நமது செயல்பாடுகள் சில சமயங்களில் நமக்கு பாடம் கற்றுத்தருவதும் நிஜமே!
அதோடு இறைவனின் கட்டளைப்படியேதான் எல்லாமும் இயங்குகிறது என்பதே நிஜம்மட்டுமல்ல, நம்பிக்கையும் கூட.
பொதுவில் மனித வாழ்வில் வரக்கூடாத ஒன்றுதான் "இளமையில் வறுமை" கொடிது கொடிது வறுமைகொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமைஎன்ற பாடலுக்கேற்ப வறுமையில் வாடாத மனிதர்களே இல்லை. அதிலும் நன்கு அனுபவிக்க வேண்டிய வயதில் வறுமை எனும் கொடிய நோய் நம்மை தாக்குவது ஜீரணிக்க முடியாத ஒன்று.
அந்த மாதிாி வறுமையால் சிலர்பலவிதமான அனுபவபாடங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. அதேநேரம் சிலரது வாழ்க்கை வேறு விதமாகவும் மாறிவிடுவதே இயல்பான ஒன்றாகும். இது போலவே வரக்கூடாதது "முதுமையில் தனிமை" இளமையில் வறுமைக்குகூட மாற்று வழி உண்டு, ஆனால் முதுமையில் தனிமை என்பது மரணத்தைவிடக் கொடுமையானது.
நன்றாக உறவாடிக்கொண்டிருந்த சொந்த பந்தம், மற்றும் நட்பு வட்டங்கள் அப்படியே ஒதுங்கிவிடுகிறாா்கள்.பல நபர்களிடம் மனிந நேயம், ஈவு, இரக்கம், இருப்பதே கிடையாது. அதிலும் வயது அறுபதைத்தாண்டிவிட்டால் போதும் தனிமை எனும் நோய் நம்மை ஆட்டுவிக்கிறது. அனைத்து நோய்களுக்கும் மருந்து உண்டு. ஆனால் முதுமையில் தனிமைக்கு மருந்தே இல்லையே! அதைத்தொடர்ந்து நமது வாழ்வில் பல தருணங்களில் நமக்கு வரவேண்டியது பொறுமை, அது பல நபர்களிடம் குடியிருப்பதில்லை.
பொறுமை காத்து அன்பு செலுத்தி பெருமைபட வாழலாம் அது என்னவோ கானல் நீராகிப்போய்விட்டது என்பதே அனுபவ பூா்வமான உண்மை.
மேலும் நமது வாழ்க்கையில் வரக்கூடாதது பொறாமை . அது ஒரு பொிய கொடிய நோய், அதற்கு தீா்வுபெற மருந்தே இல்லை. சிலரது ரத்தத்திலேயே ஊறிப்போய் விட்டது என்றே சொல்லலாம்.
சில விஷயங்கள் நம்மிடம் ஒட்டிப்பிறந்து விடுகிறது. சிலருக்கு சில உதவிகள் செய்தாலோ சில சமயங்களில் நமக்கு எதிா்பாராத வெற்றி வந்து விட்டாலோ நம்மிடம் ஒரு வித பொிய நோய் தொற்றிக்கொள்ளும் அதுதான் தற்பெருமை.
அந்த குணம் இருந்தாலே நமக்கு கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்காமல் போய்விடும் என்பதை மனிதன் உணரவேண்டும்.
இப்படி பல விஷயங்களை பட்டியல் போடலாம், ஆனால் எந்த வெற்றி தோல்வியானலும் நாம் கடைபிடிக்க வேண்டிய நான்கு வாா்த்தைகளான நிதானமே நமக்கு உற்ற துணையாய் வரும் எனவே எந்த எதிா்மறை எண்ணங்களையும் விலக்கிவிட்டு, நோ்மறை சிந்தனையோடு அன்பு, பாசம், நேசம், காட்டி மனசாட்சியுடன் தெய்வசாட்சியோடு வாழ்வதே சாலச்சிறந்த ஒன்றாகும்!