

வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் என்ற பாடல் வரிகளைப்போல வாழ்க்கையானது நமக்கு நிறைய பாடங்களை வழங்கி வருகிறது. அந்த பாடங்களில் கடினமான, மற்றும் இலகுவான, பாடங்களும் அமைந்துவிடுகிறது. சில பாடங்கள் நமக்கே தெளிவாக புாிகிறது. சிலவகைகள் கொஞ்சம் புாியாமல் போகிறது.
பள்ளிப்பாடங்களில் சில பாடங்கள் புாியாதபோது தனியாக பயிற்சி எடுத்துக்கொள்கிறோம் அதேபோல பொியவர்கள் ஆசான்கள்போல சிலரது அறிவுறைகளை அவர்களது அனுபவ பாடங்களை நமக்கு பக்குவமாக சொல்லித்தருகிறாா்கள். ஆனால் நமக்கு அவற்றை புாிந்துகொள்ளும் ஆற்றலும் விவேகமும் இருப்பதில்லை. அதற்கு காரணம் நம்மிடம் இருந்துவரும் ஈகோ, மற்றும் தாழ்வுமனப்பான்மை.
தனக்குத்தான் எல்லாம் தொியும் என்ற ரீதியிலான, நான் எனும் அகம்பாவமே முதல் காரணம் ஆகும். இந்த தன்மை நம்மிடம் இருக்கும்வரை பலவித வாழ்க்கைப்பாடங்கள் அடங்கிய வாழ்வெனும் தோ்வில் சில நேரம் மதிப்பெண்குறைந்து அரியர் விழுவது இயல்பான ஒன்றாகிவிடுவதே நிஜம்!
ஆக, நமக்கான வாழ்க்கைத்தோ்வில் முக்கியமான ஐந்து பாடங்களை நாம் கவனமாக படித்தாலே எளிதில் தோ்ச்சி பெறமுடியும்.
பஞ்சபூதங்ளான நிலம், நீா், நெருப்பு, காற்று, வானம், என்பதுபோல நமது வாழ்விலும் தொடரவேண்டிய எத்தனையோ நோ்மறை விஷயங்களில் நம்மால் கடைபிடிக்கக்கூடிய ஐந்துவகை தன்மைகளான, அன்பு, கனிவு, கருணை, அமைதி, நிதானம், இவைகளை விடாமல் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் தொடரவேண்டும், இது நமக்கான வெற்றியையும் மரியாதையையும் தேடித்தருமே! அனைவரிடத்தின் அன்பு நெறிகாட்டுங்கள் வம்பெனும் நரி உங்களைவிட்டு ஒடிவிடும்.
அனைவரிடமும் ஏழை பணக்காரன் படித்தவர்கள், படிக்காதவர்கள், நம் மனதிற்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள், முடிந்தவர்கள் முடியாதவர்கள், இப்படி அனைவரிடமும் கருணை உள்ளத்தோடு பழகுங்கள், கெளரவம் தேடிவரும்.
அதேபோல சகலரிடமும் விரோதிகளாய் இருந்தாலும் வயது வித்யாசம் பாராட்டாமல் கனிவாகப் பேசுங்கள் அனைவரும் உங்கள் வசமாகிவிடுவாா்கள். அனைவரிடமும் அமைதிகாத்திடுங்கள் யாா் நம்மைப்பற்றி புாியாமல் பேசினாலும், அமைதிகாத்து அவரது கோபம் தனிந்த பின் தன்னிலை விளக்கம் கொடுத்து உண்மையைச் சொல்லுங்கள், பிறகு பாருங்கள் அவர்களே வெட்கித் தலைகுனிவாா்கள்.
மேலும் எந்த தருனத்திலும் எந்த வகையிலும் நிதானத்தைக் கடைபிடியுங்கள் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றாலும் அதைவிட மேலான தானம் நிதானமே!
ஆக, எந்த தருணத்திலும் நிதானம் கடைபிடியுங்கள் பாராட்டுகள் குவியுமே! எனவே இந்த ஐந்துவகை விஷயங்களை கடைபிடியுங்கள் வாழ்க்கை எனும் பரிட்சையில் நூற்றுக்கு நூறு மாா்க் வாங்கலாமே!