

சிலர் வயதானால் அலுத்துக் கொள்வார்கள். இன்னும் சிலர் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள் அதற்குக் காரணம் இந்த 9 பழக்கங்கள்தான்.
அடுத்தவர்கள் கூறுவதை நல்லதாக இருந்தால் மறக்காமல் ஏற்பார்கள். தான் கூறுவது மட்டும்தான் சரியானது என பிடிவாதம் பிடிக்கமாட்டார்கள்.
எல்லாவற்றிலும் நேர்த்தியை எதிர்பார்க்காமல் முடிந்த வரையில் கார்யங்களை சரியான மனத்திருப்தியுடன் செய்வார்கள். சமையல் சரியாக வரவில்லையா? உங்கள் தோட்டம் சரிபடுத்தப்பட வேண்டுமா? இதற்கெல்லாம் கவலைப்பட்டு உடலை கெடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
சிலருக்கு எப்போதும் தங்களை அடுத்தவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் இருக்கும். இதனால் மனதில் வேற்றுமை ஏற்படுவதோடு இன்னும் அதிகமாக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் மகிழ்ச்சியாக இருக்கும் வயதானவர்கள் தன்னைவிட மிக வசதியானவர்களைப் பார்த்து பொறாமை படமாட்டார்கள். நல்ல பணம் இருப்பவர்களின் வாழ்க்கை சில சமயம் மகிழ்ச்சி இல்லாமல் போகலாம். இருப்பதில் திருப்தியோடு இருப்பார்கள்.
சிலர் தங்கள் பொருட்கள் உடைகளை காரணமே இல்லாமல் குவித்து வைத்திருப்பார்கள். நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களைவிட நீங்கள் பெற்றிருக்கும் அனுபவங்களே உண்மையான மகிழ்ச்சியைத்தரும். பொருட்களை வாங்குவதைவிட நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடவே விரும்புவார்கள். நாம் எந்தப் பொருளையும் இந்த உலகைவிட்டுப் போகும்போது எடுத்துச்செல்ல முடியாது என்பதை நன்கு உணர்ந்தவர்களாக இருப்பர்
நீங்கள் எல்லோரும் உங்கள் ஆதிக்கத்தில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். ஆனால் மகிழ்ச்சியான வயதானவர்கள் எதையும் அடுத்தவர் மீது திணிக்காமல் தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வார்கள் எந்த ஒரு சூழலிலும் தங்களை பழக்கம் படுத்திக்கொள்வார்கள்.
மகிழ்ச்சியான வயதானவர்கள் தங்கள் வயதைப் பற்றிப் பொருட்படுத்த மாட்டார்கள் தங்கள் வயதைக் குறைப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடமாட்டார்கள். வயதானால் அதனால் ஏற்படும் சிறு பிரச்னைகளை பெரிதாக கருதமாட்டார்கள். வயதானால் உங்களால் வண்டி ஓட்டமுடியவில்லை என்றால் நடைப் பயிற்சியில் ஈடுபட்டு பறவைகளைக் கண்டு ரசிப்பது போன்ற பழக்கங்களில் ஈடுபடுத்திக்கொள்வார்கள்.
வயதானவர்கள் அடுத்தவர்களின் பாராட்டுகளுக்காக ஏங்கமாட்டார்கள் தங்கள் சாதனைகளோ தோல்விகளோ எதுவாக இருந்தாலும் சமச்சீரான நிலையில் இருப்பார்கள். இதனால் எந்த வருத்தம் இல்லாமல் சந்தோஷமாக இருப்பார்கள்.
அதை இப்படிச் செய்திருக்கலாமே நான் இன்னும் பொறுமையாக இருந்திருக்கலாமே என்று பழையவற்றை யோசிப்பதில் மனதை செலுத்தமாட்டார்கள். தாங்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி அதையே நினைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் பழைய சம்பவங்களிலேயே வாழமாட்டார்கள் முன்னோக்கிச் செல்வதிலையே குறியாக இருப்பார்கள்.
தங்கள் சக்தி காலியாகும் அளவிற்கு இல்லாமல் உறவினர்களோடு அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுடன் சுமுகமான உறவில் இருப்பதையே விரும்புவார்கள். எந்தெந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் பழகுகிறார்கள் அவர்களிடம் அதிக பழக்கம் வைத்துக் கொள்வதில் விருப்பமாக இருப்பார்கள். உறவுகளோடு இணக்கமாக இருந்து தனக்கு சக்தியைக் கொடுக்கும் என்பதை நன்கு உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.