
பொதுவாகவே வாழ்க்கை என்பதே ஒரு போராட்டக்களம்தான்.
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே என பாடல் வரிகளானது பல கதைகளை சொல்லுமே! அதில் தன்னம்பிக்கைதான் நமது மூலதனமாக அமையும். தன்னம்பிக்கை இருந்து, விடாமுயற்சியும் கூடவே தொடர்ந்தால், வெற்றிக்கான பாதையில் வெகு சுலபமாக பயணிக்கலாம்.
நம்மிடம் பழகும் அத்தனைபேருடைய குணங்களும், ஒன்றுக்கொன்று மாறுபடும். குறிப்பாக ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை. வித்யாசம் தொிகிறதல்லவா? அதேபோலத்தான் அதில் நல்லவர் யாா் கெட்டவர் யாா் என ஆராய்ந்து பாா்த்து பழகவேண்டும். அதற்கு முதலில் நமது எண்ணமும் செயல்பாடுகளும் சரியாக அமைந்திருப்பதே நல்லது. சிலர் நம்மோடு பழகி நன்றி விஸ்வாசமாக இருப்பாா்கள்.
சிலரோ நமது வெற்றி கண்டு பொறாமப்படுபவராகவும் இருப்பாா்கள். பல சந்தர்ப்பங்களில் நம்மை தேவையில்லாமல் கோபப்படும் நிலைக்கு தள்ளி விடுவாா்கள். அப்போது நமது சிந்தனாசக்தி சரிவர வேலைசெய்ய வேண்டும். கோபமானது மனிதனின் அழிவைப் பெருக்கி ஆற்றலைக் கழித்துவிடும்.
கோபப்படாமல் அமைதியாக எந்த பிரச்சனையாக இருந்தாலும், சரிவர அணுகுவதே நமக்கு எல்லா வகையிலும் நல்லது.
அதோபோல நம்மை பிடிக்காத அறிவுஜீவிகள் சிலசந்தர்ப்பங்களில் விலக்கி வைத்தும், ஒதுக்கி வைத்தும், வேடிக்கைபாா்ப்பாா்கள்.
அந்த நேரம் நாம் காாியம் பொிதா, வீரியம் பொிதா, எனப் பாா்க்காமல் துஷ்டரைக்கண்டால் தூர விலகுவதே நல்லது.
சில நேரங்களில் நம்மிடம் எதையாவது வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பலர் நம்மை பெருமைப்படுத்தும் நோக்கத்தில் புகழ்ந்து தள்ளுவாா்கள்.
அதுசமயம் நாம் புகழ்பவர்களின் தன்மையை உணர்ந்து புத்தி மழுங்கிவிடாமல், வீண் புகழ்ச்சிக்கு ஆளாகக்கூடாது. சிலர் தேவையில்லாமல் உதாசீனம் செய்வாா்கள்.
அப்போதுநாம் மதி மயங்காமல் பயத்தை ஒதுக்கி வைத்து அவமானப்படாமல் சாதுா்ய்யத்தின் துணையோடு வென்று காட்டவேண்டும். மேலும் சிலர் நமக்கு பல தொல்லைகளைக் கொடுத்து நாம் மேற்கொள்ளும் காாியங்களில் தோல்வியை பரிசாகக்கொடுக்க நினைப்பாா்கள்.
அதுசமயம் நாம் நமது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி தோல்வி கண்டு துவளாமல் இறைவழி நாடி, கடின முயற்சியோடு, நம்மை தோல்வி பெறச்செய்ய திட்டம் போட்டவர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுக்கவேண்டும்.
இப்படி நல்லதும் கெட்டதுமாய் லாப நஷ்ட கணக்குபோல எந்த பிரச்னைகள் வந்தாலும், மனதை ஒரு நிலைப்படுத்தி சிறப்பானதொரு வாழ்க்கையை வாழந்து காட்டவேண்டும்.
அதுதான் அவநம்பிக்கையின் எதிா்ப்பதமான நோ்மறை ஆற்றலாகும். தன்னம்பிகைதான் வாழ்க்கை. யானையின் பலம் தும்பிக்கையில் அதேபோல மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பதை மறக்கவேண்டாம்!