எதிரியிடம் மகிழ்ச்சியை காட்டுங்கள்!

Show happiness to the enemy!
Motivational articles
Published on

நாம் கோபத்தை பேச்சில் காட்டுவோம். அப்படி காட்டும் இடமும் சூழ்நிலையும் நம் மனநிலையை பெரிதும் பாதிக்கும். யாராவது உங்களுக்கு எதிரியாக இருந்தால் முதல் எதிரியாக நினைக்காதீர்கள். ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குங்கள். கோபத்தை விட எதிரியிடம் மகிழ்ச்சியை காட்டுங்களேன். பிறகு பாருங்கள் கோபத்தின் விளைவு எப்படி இருக்கும். மகிழ்ச்சியின் விளைவு எப்படி இருக்கும் என்பதை நீங்களே உணர்வீர்கள்.

யாராவது நம்மிடம் கோபமாக ஒரு கேள்வியை எழுப்பி நீ இப்படி செய்து விட்டாயே என்று கேட்டால், இதை விட துயரமான சம்பவம் அல்லது இதைவிட கஷ்டமான சம்பவம் எனக்கு நடந்துள்ளது என ஒரு வரி கூறுங்களேன் எல்லாமே தலைகீழாய் மாறிவிடும். எதிரி உங்கள் தோளில் நிச்சயம் கை போடுவார். இதை உணர்த்துவது தான் இந்த புரட்சியாளரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இப்பதிவில்

மைக்கேல் காலின்ஸ் என்பவர் அயர்லாந்து நாட்டுப் புரட்சியாளர் மற்றும் சிறந்த போர்வீரர். இவர் இங்கிலாந்தை எதிர்த்துப் போரிட்டபோது இவரது தலைக்கு ஐயாயிரம் பவுண்டுகள் நிர்ணயித்து இங்கிலாந்து அறிவித்தது. காலப்போக்கில் சூழ்நிலை மாறி இங்கிலாந்து சமாதானப் பேச்சு நடத்தியது. இங்கிலாந்துப் பிரதமர் சர்ச்சிலின் வீட்டில் அப்பேச்சு நடந்தபோது ஒரு சமயத்தில் காலின்ஸ் கோபமாக "எனது தலைக்கு ஐயாயிரம் பவுண்டுகள் விலை வைத்தீர்களே?” என்று கேட்டார்.

உடனே சுதாரித்த சர்ச்சில் நிலைமையைச் சுமூகமாக முடிக்க அவரிடம் "ஐயா, நான் ஆப்பிரிக்காவில் போயர்களின் கையில் மாட்டிக்கொண்டு பின்பு தப்பியோடியபோது எனது தலைக்கு இருபத்து ஐந்து பவுண்டுகள்தான் விலை நிர்ணயித்தார்கள். விலையை வைத்துப் பார்த்தால் உங்களுக்கு மதிப்பு அதிகம்" என்று சாமர்த்தியமாகப் பேசினார். கோபமாகப் பேசிய காலின்ஸ் இதைக்கேட்டுச் சிரித்ததோடு இரு நாட்டுப் பிரச்னைகளும் பேசித் தீர்க்கப்பட்டது. லாவகமாகப் பேசிக் காரியத்தைச் சாதித்துவிட்டார் சர்ச்சில்!

இதையும் படியுங்கள்:
வெற்றி என்ற இலக்கை அடைய உதவும் 8 சக்சஸ் பாயிண்ட்டுகள்!
Show happiness to the enemy!

கோபமான பேச்சும் நட்பான மனநிலையில் பெரிதும் படுத்தப்படுவதில்லை, மகிழ்ச்சியான சூழல் எதிர்ப்புகளைத் தாங்கிக்கொள்ளும் சக்தி படைத்தது. எனவே, எதிரிகளை வெல்லவும், எதிரிகளைச் சமாளிக்கவும் முதலில் மகிழ்ச்சியான சூழலைக் கொண்டுவரலாம், இதுவும் ஒரு நல்ல அணுகுமுறை தானே!

"பொறுமையும், அன்பும், அடக்கமும் உடையவராய் அச்சம் இல்லாதவர் யாரோ அவர் அறிஞர்''

புத்தர் கூறிய பொன்மொழியை மனதில் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com