தவறுகளைத் திருத்தும் மனப்பக்குவம்: உறவுகளையும் வாழ்வையும் மேம்படுத்த!

Lifestyle articles
Motivational articles
Published on

வாழ்க்கை என்பது ஒரு பரமபத விளையாட்டு. நம் கையில் இருந்து உருட்டப்படும் கட்டையில் இருக்கிறது விஷயம். ஒரு குறிப்பிட்ட எண் விழுந்தால் அதற்கேற்ப ஏனி ஏற்றி விடுகிறது. பாம்பு இறக்கிவிடுகிறது.

அதேபோல சிலர் கடைபிடித்துவரும் இரக்க மனப்பான்மை, அது மற்றவர்கள் மீது கருணை காட்டுவதையே குறிப்பிடும்.

நாம் இரக்கம் காட்டுவதால் பரமபத ஏனி அவர்களை ஏற்றிவிடுகிறது. அனைத்து உயிா்களிடமும் இரக்கம் காட்டவேண்டும். நமது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் கடவுளின் பாா்வையில் பட்டு பாவபுண்ணிய கணக்கில் சோ்க்கப்படுகிறது. அதை நினைவில் கொள்வதே நல்லது.

அது தொிந்தும் சிலர் பாவத்தை மூட்டை கட்டிக் கொண்டுதான் இருக்கிறாா்கள். எந்த நிலையிலும் பொதுவாகவே தனது தவறுகளை திருத்திக்கொள்ளும் மனோபக்குவம் நம்மிடம் இருப்பதில் தவறேதுமே கிடையாது.

நமது தவறுகளை பிறர் சுட்டிக்காட்டினாலும், அதை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை நம்மிடம் இருக்கவேண்டும்.

நாம் பிறர் மனது நோகும்படியான வாா்த்தைகளை சொல்லிவிட்டு அதன்பிறகு வருந்துவதால் பயன் எதுவும் கிடையாது.

அதனால் நட்பு, மற்றும் உறவில் விாிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதே!

அதனைத்தொடர்நது நமது செயல்களில் தவறு இருக்கும் பட்சத்தில் நாம் அவர்களிடம் வருத்தம் தொிவிப்பது ஒன்றும் தவறில்லை.

ஆக நாம், நமக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை நம்மிடமிருந்து விலக்கிட வேண்டும்.

நம்மிடம் கருணை மனப்பான்மை இருப்பதும் நல்லதே!

நம்முடைய தவறுகளுக்கும் துன்பங்களுக்கும் நாம் தான். பொறுப்பேற்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மலைகள் எப்படி உருவாகி இருக்கும்? அவைகள் இல்லை என்றால் நாமும் இல்லையா?
Lifestyle articles

தவறு செய்யாதவர்கள் இல்லை. அதே நேரத்தில் அதையே கொள்கையாகக் கொண்டு வாழ்வதில் அர்த்தமே இல்லை.

மொத்தத்தில் இரக்கம் கருணை உள்ளம் இவைகள் நம்மிடம் இருப்பதும் அதை நாம் எந்த தருணத்திலும் விடாமல்கடைபிடிப்பதே நல்லது.

அதே நேரம் சிலர் சிறிய,சிறிய தவறுகள் செய்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் நம்மிடம் இருப்பதும் நல்லதே.

அநேகமாக அனைவரிடமும் அன்பு பாராட்டி நாமும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்வித்து வாழ்வதில் தவறேதும் கிடையாதே!

எனவே இழந்ததைப் பற்றி கவலை கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சி கடைபிடித்து நம்மிடம் இருக்கும் இரக்க சுபாவத்தை விடாமல் கடைபிடிப்பதே சகல விஷயத்திற்கும் நல்லதாகும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com