வெற்றிக்கு வழிகாட்டும் சிந்தனைத்துளிகள்!

Success secrets
Mindset for Success
Published on

லக்குகளை நோக்குகையில் கவனமாக இருங்கள்: வாழ்வின் வழிமுறைகளைப் பாருங்கள். நீங்கள் எப்படி வாழவேண்டும் எனத் தீர்மானியுங்கள். அவ்வழிமுறைகளுக்குள் வாழ நீங்கள் என்ன செய்ய முடியும் எனத் தீர்மானியுங்கள்". -Hunter S. Thompson.

எல்லோருக்குமே  வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற அவா இருக்கிறது. ஆனால் அதற்கான வழிகள் என்ன என்பதிலும் தங்களால் விரும்பியதை அடைய முடியுமா என்ற சந்தேகமும் அவர்களை முழுமையாக செயல்பட விடாமல் தடுக்கிறது.  

அனைவருக்கும் அனைத்து திறமைகளும் உண்டு ஆனால் அந்தப் திறமைகளை கண்டறிந்து செயல் படுத்துவதில்தான் இருக்கிறது ஒவ்வொருவரையும் வெற்றியும். ஒரு சிலர் தங்கள் விருப்பத்துக்கான இலக்கை வெகு எளிதில் கண்டறிந்து அதை நோக்கிய செயல்களில் ஈடுபட்டு வெற்றி மனிதர்களாக பாராட்டப்படுவார்கள்.

ஒரு சிலரோ தங்கள் விருப்பத்திற்குரியது எது என்பதை கண்டறியவே அடுத்தவரின் துணையை நாடுவார்கள் அல்லது  தாங்கள் விரும்பிய துறைகளில் செயல்புரிய முடியுமா என்று  திறமைகள் இருந்தும் தங்கள் மேல் நம்பிக்கை இன்றி செயல்படுவார்கள். வெற்றிக்கு இதுவே முக்கிய பின்னடைவு ஆகும்.

இதையும் படியுங்கள்:
மாணவர்களின் வெற்றிக்கு வித்திடும் 9 சிந்தனைத் துளிகள்!
Success secrets

நாம் விரும்பிய பொருளை நாம் விரும்பிய இலக்கை அடைந்தாக வேண்டும் அல்லது விருப்பம்போல் ஒரு செயல் நடந்தாக வேண்டும் என்றால் முதலில் நமது விருப்பத்திற்குரியது எதுவென்று புரிந்து கொள்ள வேண்டும் அடுத்து அதை அடைவதற்கான வழிமுறையை ஆராய வேண்டும். அந்த செயலுக்கு யார் யாருடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்பதை வரிசைபடுத்த வேண்டும். ஏனெனில் எந்த ஒரு காரியமும் கூட்டு முயற்சியின்றி வெற்றி அடைந்ததாக சரித்திரம் கிடையாது.

நமது இலக்கிற்கான விருப்பம் நியாயமானதாக இருந்தால் அதற்கு அடுத்தவர் உண்மையான ஆர்வமும் உதவியும் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். ஆனால் துவக்கத்திலேயே நமது விருப்பத்தை முழுமையாக எவரிடமும் சொல்லி விடக்கூடாது. ஏனெனில் ஒரு செயலுக்கு தடையாக இருப்பவர்கள் நம்மைச் சுற்றியே  இருப்பார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை.

நம்மிடம் எண்ணிக்கை அற்ற விருப்பங்கள் இருக்கலாம். ஆனால் அதில் எதை முதலில் அடைவது அல்லது அதற்கான இலக்கு எது என்பதில் தெளிவு இருக்க வேண்டும். அது நமது வாழ்க்கை முறைக்கு சரியாக வருமா என்பதிலும் கவனம் தேவை.

முக்கியமாக நமது இலக்கு என்பது நடைமுறைக்கு பொருந்துவதாக இருந்தால் அதனால் விளையும் பயனும் மன நிறைவும் அதிகம் இருக்கும். நடைமுறை என்பது சாத்தியங்களைக் கொண்டது. அறிவு, ஆற்றல், வாய்ப்பு, சகமனிதர்களின் ஒத்துழைப்பு, சூழல் போன்றவை தான் அந்த சாத்தியங்கள். இவை அனைத்தும் சேர்ந்தே ஒரு காரியத்தை ஒரு அல்லது ஒரு செயலை நிகழ்த்தும் தன்மை கொண்டது.

இதையும் படியுங்கள்:
சுதந்திரமே உண்மையான மகிழ்ச்சி!
Success secrets

ஆகவே. நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை அடையும் முயற்சியில் தெளிவாக இலக்கை நிர்ணயித்து அந்த செயலுக்கு துணை புரிபவர்களின் ஒத்துழைப்பை நாடி அந்த செயல் நமது வாழ்க்கை முறைக்கு ஒரு வாழ்க்கை முறைகளுக்குள் பொருந்தி போகிறதா என்பதை கவனித்து அதன் பின் தீர்மானித்து செயலில் இறங்கினால் வெற்றி நமதே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com