

பொதுவாகவே வாழ்க்கையில் தவிா்க்க இயலாத சமயங்களில் பொய் சொல்லும் பழக்கத்தை சிலர் கடைபிடிக்கிறாா்கள். அது தவறு என்பதை நாம் உணரவேண்டும்.
கணவன் அலுவலக நண்பர்களுடன் ஏதாவது ஒரு சில காரணங்களால் அலுவலகம் முடிந்துவரும் வேலையில் மது அருந்திவிட்டு வரும் சத்தர்ப்பத்தில் மனைவியிடம் பொய்சொல்லும் பழக்கம் வருகிறது. அதை நியாயப் படுத்தி ஏதேனும் ஒரு காரணம் காட்டி பொய்யை நியாயப்படுத்துவதும் வாடிக்கை.
அதேபோல வாசலில் வந்த புடவை வியாபாாியிடம் அக்கம் பக்கத்தில் உள்ள தோழிகளுடன் சோ்ந்து புடவை கடன் தொகையில் வாங்குவது, அதில் பாதி புடவைகளை கணவனிடம் மறைப்பது, பின்னா் ஒரு நாளில் உண்மை தொியவரும் நிலையில் அவரவர் செய்த தவறுகளை தலைப்புச் செய்தியாக்கி, வீட்டில் உள்ள பிள்ளைகள் மத்தியில் கணவன் மனைவி இருவரும் சச்சரவில் ஈடுபட, அதனால் பிள்ளைகளின் மனது பாதிப்படைவதும் பல குடும்பங்கில் நிகழ்ந்து வரும் நிலைதான்.
நமது பிள்ளைகளின் மனதில் தேவையில்லாத அழுத்தம் குடிகொண்டுவிடுவதும் பல குடும்பங்களில் நிலவி வருவதும் இயல்பே. அதேபோல பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் பலவித பொய்களை மூட்டை கட்டி வைத்திருக்கும் நிலை பல குடும்பங்களில் நிகழ்வதும் நிஜம்தான்.
தரமான நெய், மற்றும் எண்ணையில் தயாாிக்கப்பட்ட உணவு என ஹோட்டலில் தொடங்கி பல சரக்குகடை, மற்றும் பணிபுரியும் அலுவலகங்களில் அனைவரிடமும் சந்தர்பத்திற்கேற்ப பொய்சொல்லுவதும் உண்டே!
இதில் மண் மனை வாங்குவதிலும் பொய், பல்வேறு சொந்த பந்தம், மற்றும் நட்பு வட்டங்களிலும் மனதார பொய்சொல்லி சமாளித்தல், இப்படி பொய்யானது அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நீக்கமற நிறைந்திருக்கிறது.
பொய்யை நாம் நமதுவாழ்வில் இருந்து நீக்கிவிட வேண்டும், காரணம் பொய் என்பது ரயில் பெட்டிபோல சங்கிலித்தொடராய் நீண்டுகொண்டே போவதை ஆரம்பத்திலேயே நிறுத்தும் முயற்சியில் நாம் ஈடுபடவேண்டும்.
ஆயிரம் பொய்யைச்சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்திவைக்க வேண்டும் என ஒரு பழமொழி சொல்வாா்கள்.
சமுதாயம் வெகுவாக மாறிவருகிறது. பொியவர்களை மதிக்கும் குணம் அவர்களிடம் ஆலோசனை கேட்கும் நிலை, தற்சமயம் வெகுவாக குறைந்துவருவதை பல இடங்களில் கண்கூடாகவே பாா்க்கமுடிகிறது.
பொய்யைச் சொல்லி பல நாள் போலியாக வாழ்வதைவிட உண்மையைச்சொல்லி மாா்க்கண்டேயன் போல வாழலாமே! பொதுவில் பொய்யை தவிா்த்து உண்மையை கடைபிடித்து வாழ்வதே எல்லா வகையிலும் நல்லதாகும்!