ஒரு நிமிடம்! நீங்கள் இந்த விஷயத்தை மறந்துவிட்டீர்களா?

Those who achieved great success
Motivational articles
Published on

ணத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்? என்று நினைப்பதால்தான். இன்று நம்மில் பலர் நன்றி மறந்தவர்களாக அலைகிறார்கள்.

பணம் கொடுத்தால்கூட பலருடைய அன்பும், பாசமும். உதவியும் இல்லையென்றால், எந்தச் செயலையும் நம்மால் சிறப்பாக செய்ய முடியாது.

தம்மில் பலர் நமக்கு நேரடியாக உதவி செய்தவர்களை மட்டுமே, உதவி செய்தவர்களாக நினைத்து நன்றி உணர்வோடு இருக்கிறோம். பணம், பொருள், உடல் உழைப்பு, தர்மம், ஆதரவு இரக்கம் எனப் பல்வேறு நிலைகளில் நேரிடையாக நமக்கு உதவி செய்தவர்களை நம்மால் எளிதில் அடையாளம் காண இயலும். எனவே அவர்களுக்கு நன்றி சொல்வது கடினமான செயல் அல்ல.

ஆனால், நமது நலனுக்காகவும், வளர்ச்சிக்காவும் நோடியாக வந்து உதவாமல், மறைமுகமாக பலர் உதவியிருக்கலாம். சிபாரிசு தொலைபேசி மூலம் ஆதரவு நாம் பயன்படுத்துவதற்காக பொருட்களை உற்பத்தி செய்வது என வெல்வேறு நிலைகளில் மறைமுகமாக நமக்கு உதவி செய்தவர்கள் பலர் இருப்பார்கள்.

அவர்களையும் இனம் கண்டு, தகுந்த நேரத்தில் நன்றி சொல்ல பழகிக்கொள்ள வேண்டும். ஆதரவு தந்த அம்மா, அப்பா, அரவணைத்து நிற்கும் அண்ணன், தங்கைகள், பக்கபலமாக இருக்கும் பக்கத்துவீட்டுக்காரர்கள், ஊக்கத்தோடு உற்சாகப்படுத்தும் உறவுக்காரர்கள், உங்களைப் பாராட்டும் ஊர்க்காரர்கள், சிறப்பாக பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள், இலவச கல்வி தந்த இந்திய அரசு எனப் பலரிடம் பல்வேறு விதமான உதவிகளை நீங்கள் பெற்றிருப்பதை மறந்துவிடக்கூடாது.

இதையும் படியுங்கள்:
90% பேர் செய்யுற பெரிய தப்பு! அதனால்தான் உங்களால் முன்னேற முடியவில்லை!
Those who achieved great success

ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்களுக்கு இந்த உலகத்தில் உயர்வு இல்லை என்பது திருவள்ளுவரின் அழுத்தமான சிந்தனை ஆகும். எனவே, நமக்கு உதவியவர்களுக்கு நாம் நிச்சயமாக நன்றி சொல்ல வேண்டும். அதேபோல் மற்றவர்களுக்கும் பலனை எதிர்பார்க்காமல் உதவ செய்ய முன்வர வேண்டும்.

உலக அளவில் சிறந்த வெற்றியைப் பெற்றவர்கள் எல்லாம் தங்களுக்கு உதவிய நல்ல உள்ளங்களை நாள்தோறும் வணங்குகிறார்கள். கற்றுத்தந்த ஆசிரியர்கள், சிறப்பைப் பெற்றுத்தந்த நண்பர்கள், உறவினர்கள் என பட்டியலிட்டு, உதவி செய்தவர்களை நன்றியோடு நினைத்துப் போற்றுகிறார்கள்.

இளம் வயதிலேயே நன்றியுணர்வை வளர்த்துக் கொண்டவர்களால்தான் வளமான வாழ்க்கையை வாழ்ந்து, மகத்தான வெற்றியைப் பெற்று, சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்” என்பதை உணர்ந்துகொண்டால் வெற்றி என்னும் சொல் நம்மோடு நிரந்தரமாகத் தங்கிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com