வேலை செய்வதற்கு உங்களை ஊக்கப்படுத்தும் 15 Motivational Quotes!

motivational quotes for work
motivational quotes for work

 உங்கள் பணியில் அதிக வேலைச் செய்துவிட்டு இப்போது கடமைக்கென்று சலிப்புடன் ஏனோ தானோ என்று வேலைச் செய்கிறீர்களா? கவலை வேண்டாம். அனைவரும் தன்னுடைய வாழ்வில் ஒருமுறையாவது இந்தச் சூழலை சந்தித்திருப்பார்கள். அப்போது உங்களின் உற்சாகத்தை எழுப்பி ஊக்கமடைய இந்த 15 தத்துவங்களைப் படியுங்கள்.

1.  உங்கள் பணியில் சிறந்து விளங்க வேண்டுமென்றால், அதற்கு உங்கள் பணியை நேசித்து செய்வது மட்டும்தான் ஒரே வழி. – ஸ்டீவ் ஜாப்ஸ்

2.  கடிகாரத்தைப் பார்க்காதீர்கள், நீங்கள் வேலை செய்வதில் கவனம் செலுத்துங்கள். முன்னேறுங்கள். – சாம் லிவென்சன்

3.  உங்களால் முடியும் என்பதை நம்புங்கள், அப்போதே பாதி அளவு முன்னேறி விட்டீர்கள் என்று அர்த்தம். – தியோடர் ரூஸ்வெல்ட்

4.  வாய்ப்புகள் வராது, நீங்கள்தான் உருவாக்க வேண்டும். – கிறிஸ் க்ராஸர்

5.  வெற்றியின் வழி சந்தோஷம் இல்லை. சந்தோஷத்தின் வழிதான் வெற்றி. செய்வதை சந்தோஷத்துடன் செய்தாலே முழுமையாகச் செய்துவிடலாம். – ஆல்பர்ட் ஸ்கெவெயிட்ஸர்

6.  வெற்றிக்கான பாதையும் தோல்விக்கான பாதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். – கொலின் ஆர். டேவிஸ்

7.  முக்கால்வாசி வாழ்க்கை என்பது உங்களுடைய பணிதான், அதில் திருப்தியடைய வேண்டுமென்றால் அதற்கு முதலில் நீங்கள் செய்வதுதான் சிறந்த வேலை என்பதை உணர வேண்டும். – ஸ்டீவ் ஜாப்ஸ்

8.  திறமையின் அடிப்படையில் உழைக்காதபோது கடின உழைப்பு திறமைகளை முந்தும். – டிம் நாட்கே

9. உங்களின் அழகான கனவுகளை நம்பினால்தான், எதிர்காலம் நீங்கள் நினைப்பதுபோல் அமையும். – எலியோனர் ரூஸ்வெல்ட்

10.  சிறந்ததை நோக்கிச் செல்ல நல்லதை இழக்க பயம் கொள்ளாதீர்கள். – ஜான் டி.ராக்ஃபெல்லர்

11. வெற்றி என்பது பொதுவாகத் தன்னை முழுவதுமாக அந்த வேலைகளில் ஈடுபடுத்தியவர்களுக்குத்தான் கிடைக்கும். – ஹென்ரி டேவிட்

12. உழைப்புக்கு (work) முன்னால் சாதனை (Success) வரும் என்பது அகராதியில் மட்டும்தான். – விடால் சஸ்ஸுன்

இதையும் படியுங்கள்:
உறுதியான மன உறுதி இருந்தால் எதையும் வெல்லலாம்!
motivational quotes for work

13. வெற்றி என்பது உங்களிடம் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்ததல்ல, நீங்கள் யார் என்பதைப் பொறுத்துதான். – போ பென்னட்

14.  மூளையில் பயத்தை வைத்துக்கொண்டு உங்களை சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள். மனதில் உங்கள் கனவை வைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்லுங்கள். - ராய் டி பென்னட்

15. வெற்றி என்பது அடுக்கடுக்கான தோல்விகளிலும் உற்சாகம் இழக்காமல் கற்றுக்கொள்வதுதான். – வின்ஸ்டன் சர்ச்சில்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com