அருள்மொழிகள்: காஞ்சி பெரியவரின் உபதேசங்கள்!

motivational quotes in tamil
Kanchi maha periyava blessing
Published on

கோபத்தில் பொறுமை, செல்வத்தில் எளிமை, ஏழ்மையின் மேன்மை, தோல்வியில் விடாமுயற்சி துன்பத்தில் தைரியம் பதவியில் பணிவு இவைகள் வீரனின் பெருமை.

பகவான் கிருஷ்ணர் எடுத்த பல அவதாரங்களில் விஷ்ணு அவதாரத்தில்தான் சேவை அதிகம். இராமநாதபுரத்தில் சேவைக்கு என்று ஆஞ்சநேயர் சுவாமி வந்தார். இவர்கள் இருவரையும் வணங்கி நாமும் சுத்தமான உள்ளத்துடன் எந்த சுயநலமும் கருதாமல் எந்தவித விளம்பரத்திற்கும் ஆசைப்படாமல் சேவை செய்ய வேண்டும்.

ஒருவனுக்கு பணமும் பதவியும் தன்னை விட்டு போகக்கூடாது என்ற கவலை இவைகளை காப்பாற்றிக்கொள்ள அவன் படாத பாடுபடுகிறான். அதனால் அவனுக்கு இறைவனை வணங்க கூட நேரமில்லை என்கிறான். அவனுக்கு தேவையானதை இறைவன் வழங்கி விடுகிறான் இதை மீறும் போதுதான் அவனை பல கவலைகள் வந்து மோதுகின்றன இதை உணர்ந்தாலே போதும் அவன் மேன்மையானவனாக மாறிவிடுகிறான்.

வாக்கினால் புண்ணியம் செய்யவேண்டும் அது நமக்கு பயன்படும் அது மட்டும் இல்லாமல் உபத்திரம் வராமல் காக்கும்.

விக்ரமாதித்தன் கதையில் சொல்லப்பட்ட வேதாளத்தை போன்றது மனம் வேதாளம் கட்டுப்பட்ட பின்பு எவ்வளவு காரியங்களை செய்ததோ அதை போலவே மனமும் செய்யும் இந்த மனத்தை நாம் நமக்கு அடிமைப் படுத்துவதுதான் யோகம் என்பது.

தினமும் மனத்தினாலும் வாக்கினாலும் உடம்பினாலும் பணத்தினாலும் நல்ல காரியங்களை செய்து வரவேண்டும் இதற்கு நம்மிடமுள்ள பணமெல்லாம் எப்போதுமே நம்முடையது அல்ல என்ற நினைவு இருக்கவேண்டும்.

மனிதனுக்கு ஒரு பொருள் வேண்டுமென்ற விருப்பம் இருக்கிறது. அதை அடைய முயற்சி செய்கிற நியாயமான வழி அது கிடைக்காவிட்டால் குறுக்கு வழியில் முயற்சி செய்கிறா.ன் அதுதான் பாவம்.

இதையும் படியுங்கள்:
சும்மா உட்காராம, வேலையை ஆரம்பி… உச்சகட்ட திறனை எப்படி எட்டுவது?
motivational quotes in tamil

துணி அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கில்லாமல் இருந்தால் போதாது. வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. இவை எல்லாவற்றுக்கும் மேலான நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.

பொறுமையில் இருவகை உண்டு நமக்கு நோய் விபத்து வறுமை முதலானவற்றால் உண்டாகின்ற துன்பங்களை பொறுத்துக் கொள்வது ஒன்று நமக்கு ஒருவர் துன்பத்தைக் கொடுக்கிறபோது அவரை மன்னித்து விடுவது இன்னொருவித பொறுமை.

தனக்கென்று எவ்வளவு குறைவாக செலவழிக்க முடியுமோ அப்படி எளிமையாக வாழ்ந்து மிச்சம் பிடித்து அதை தர்மத்துக்கு செலவழிப்பதுதான் தனக்கு மிஞ்சி தர்மம் என்பதன் பொருள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com