வானமே எல்லை! படித்து, உணர்ந்து, பகிர வேண்டிய 'ஊக்கமூட்டும்' வரிகள்!

Motivational Quotes in Tamil
Motivational Quotes in Tamil
Published on

வாழ்க்கை எப்போதும் சீராக இருப்பதில்லை. சோர்வும் தடைகளும் வரத்தான் செய்யும். அதற்காக நாம் நின்றுவிடலாமா? ஆனால், நம்மிடம் அசைக்க முடியாத நம்பிக்கை, தளராத உழைப்பு, மற்றும் விடாமுயற்சி இருந்தால் எத்தகைய கடினமான இலக்கையும் எட்டிப்பிடிக்க முடியும். உங்களை மீண்டும் புத்துணர்ச்சியோடு ஓட வைக்கும் சில ஊக்கமூட்டும் வரிகள் (Motivational Quotes in Tamil) இதோ. இந்தப் பதிவை சோர்வாக இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள்!

  • உழைப்பின்றி ஓர் அணுவும் அசையாது.

  • நம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் எதுவும் முடியும்.

  • தோல்விகள் ஒரு போதும் உன்னைத் தடுக்கக்கூடாது, அது உனக்கான பாடங்கள்.

  • சிறிய செயல்கள் கூட பெரிய மாற்றங்களை உருவாக்கும்.

  • சோர்வு வரும்போது, இலக்கை நினைவில் கொள்.

  • மனமே எல்லாம். நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

  • சில முயற்சிகள் வெற்றி பெறும். சில முயற்சிகள் தோல்வியுறும். ஆனால் இரண்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். முயற்சிக்க தயங்காதீர்கள்!

  • உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீதான். உன்னைச் சுற்றி இருப்பவர்கள் அல்ல!

  • உன் திறமைக்குத் தீனி போடு...உலகம் உனக்குத் தலைவணங்கும்.

  • ஓடும் கடிகாரத்தை விட வேகமாக ஓடத் துணிந்தால், வெற்றி உன் நிழலாகும்..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com