நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

Travel with a positive feeling..!
Positive feeling...
Published on

வ்வொருவருடைய வாழ்க்கையையும் வாழவேண்டியது  அவர்கள் மட்டும்தான்.

மகிழ்ச்சியாக எந்த பிரச்னையும் கடந்து செல்வது அவர் அவர் கைகளிலும், மனதிலும் தான் இருக்கின்றது.

நேர்மறை உணர்வுகள்  இவற்றிற்கு  உறுதுணையாக இருப்பத்துடன் கடந்து செல்ல உதவிகரமாகவும் செயல்படும்.

வெற்றியின் மதிப்பு தோல்வி அடைந்தவர்களால்தான் முழுமையாக உணரமுடியும்.

வெற்றி எப்படி மகிழ்ச்சி அளிக்கின்றதோ, தோல்வி  தொய்வை சந்தித்து, அனுபவித்து எதிர்கொண்டு மேலே செல்லும் தைரியத்தையும், மனவலிமை வளர்க்கும் சந்தர்ப்பதையும் அளிக்கின்றது.

வெற்றியையே சந்தித்து வரும் நபருக்கு  சிறு ஏமாற்றம், தோல்வியை தாங்கும் வலிமை இருப்பது இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

எவ்வளவுதான் தயார் செய்து இருந்தாலும்  களத்தில் குறிபிட்ட  தருணத்தின் வெளிப்பாடே வெற்றி, தோல்வியை அறிவிக்கின்றது.

அதேபோல் வாழ்க்கை பயணத்திற்கும் விதி விலக்கு  கிடையாது.

நேர்மறை  உணர்வுகளை (positive feelings) வளர்த்துக்கொண்டால்  மிக சிறப்பான பலன்களை தொடர்ந்து அனுபவிக்கலாம்.

மனம் இலகுவாகி எல்லாவற்றிலும் நேர்மறை செயல்களை காண தயார் படுத்தும் நாளடைவில்.

அது மட்டும் அல்லாமல் சந்திக்கும் எதிர்மறை விஷயங்களை தவிர்க்கவும் பழக்கிவிடும்.

மேலும் எதிர்மறை சந்தர்பங்களிலும் கூட கூடுமானவரை, மறைந்து இருக்கும் நல்ல விவரங்களை கண்டுபிடிக்க உதவும்.

உதாரணத்திற்கு  ஆட்டம் துவங்கும் முன்பு  டாஸ் (toss ) போடப் பயன் படும் ரூபாய் நாணயத்தின் இரு பக்கம். தலை வெற்றியையும், பூ தோல்வியும் குறிப்பதாக கொண்டால், தலை மகிழ்ச்சியையும், பூ  மென்மையையும் குறிப்பதாக,  நேர்மறை உணர்வுகள் (positive feelngs) வளர்த்துக் கொண்டவரால் காணமுடியும்.

எப்பொழுதும் பாசிட்டிவ் பற்றியே பேசிக்கொண்டு இருந்த ஒவ்வொருவரையும் அந்த சொல் positive நடுங்கவைத்த நிகழ்வை கண் கூடாக அனுபவித்தவர்கள் எல்லோரும் சில வருடங்களுக்கு முன்பு என்பதும் நிதர்சனமான உண்மை.

ஆம். கொரானா காலத்தில் ரிப்போர்ட் பாசிடிவ் என்றால் காத தூரம் ஓடியவர்கள்தான். Negative  என்ற ரிப்போர்ட் பாசிடிவாஸ்க நிம்மதி அளித்தது.

இதையும் படியுங்கள்:
நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?
Travel with a positive feeling..!

அந்த எதிர்மறை கால கட்டத்தில் ஏற்பட்ட நேர்மறை பலன்கள்.

சுத்தம், சுகாதாரத்திற்கு மிக மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

சமூக இடை வெளி கட்டாயமாக பின் பற்றப்பட்டது.

முக கவசம் (wearing mask) அணிவது இன்றியமையாதாகி விட்டது.

நேர்மறை உணர்வுகள்.வளர்ப்பதில் தொடர் முயற்சி முக்கிய பங்களிக்கின்றது.

நேர்மறை உணர்வுகள் நல்ல சிந்தனைகள் கற்க, பின் பற்ற பெரிதும் உதவும்.

பிறர் கூறும் குறைகளை கேட்டு திருத்திக் கொள்ளும் அளவிற்கு மனம் பக்குவம் அடையும்.

தேவையில்லாதவற்றை ஒதுக்கவும், ஒதுங்கி நிற்கவும் சந்தர்ப்பங்களும், சூழ்நிலையும் செய்யும்.

முயன்றால் முடியாதது இல்லை. எனவே முயன்று, முழு நம்பிக்கை மற்றும்  உண்மையான ஈடுபாட்டுடன் தொடர்ந்து பொறுமையுடன் பின் பற்றினால்  நேர்மறை உணர்வுகள் நம் கை வசமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com