

இன்றைய கடினமான சூழ்நிலையில் எல்லா துறைகளிலும் போட்டி அதிகரித்து வருகின்றது. தயாரிப்பு (preparation) தொடர்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி வருகின்றோம் என்பது மறுக்க முடியதா உண்மை.
தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் (Technological developments) வாய்ப்புக்களை உருவாக்கி வந்தாலும் அதிர்ச்சியையும், அச்சுறுத்தலையும் கொடுத்து வருகின்றது. உடன் மாறுதல்கள் வெகு வேகமாக மாறி வருகின்றன.
இத்தகையை இக்கட்டான சூழ்நிலையில் நீந்தி கடப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. அதே சமயத்தில் முடியவே முடியாது என்றும் கூறவும் முடியாது. அதற்கு தேவை தொடர்ந்து தம்மை மேம்படுத்திக் கொள்வது.
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டு செயல்படுத்தி வருவது புத்திசாலிதனம் மட்டும் அல்லாமல் இன்றைய சூழ்நிலையில் தாக்கு பிடிக்கவும், வாழவும் அத்தியாவசியமாகின்றது.
ஆங்கிலத்தில் கூறப்படும் வாக்கியம் இங்கு பொருந்தும். 'Survival of the fittest '. தகுதியானவர்களால்தான் நிலைத்து நிற்க அல்லது வாழ முடியும்.
தகுதியை தொடர்ந்து புதுபித்துக் கொள்பவர்களாலேயே நிலைத்து நிற்பது மட்டும் அல்லாமல் தொடர்ந்து முன்னேறி செல்லவும் முடியும்.
தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வதுடன் எதிர்நோக்கி வரும் எதிர்பாராத தொந்தரவுகள், தொல்லைகள், தாக்கங்கள், பிரச்னைகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சமாளித்து, முறியடித்து, கடந்து செல்பவர்களுக்கே முன்னேற மறைந்திருக்கும் வாய்ப்புக்களும் வழி விடும்.
எனவே தொடர்ச்சியாக தயார்படுத்திக்கொண்டு மேம் படுத்திக் கொள்வதை எக்காரணம் கொண்டும் கை விட்டு விடவே கூடாது.
மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் அந்த நபர் விரைவில் அவரது துறையில் காலாவதியாகி விடுவார். (One will become Outdated in the field).
அப்படியானால் முன்னேற்ற பாதையில் தொடர்ந்து செல்ல கடுமையான முயற்சி வேண்டும், விட்டதை பிடிக்கவும் தொடர்ந்து பயணிக்கவும். கூடுதல் சுமைகளை சுமக்க வேண்டியிருக்கும். இதற்கான காரணம் மேம்படுத்திக் கொள்வதை அலட்சிய படுத்தியது, சாதாரணமாக கருதியது (casual approach) பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற தள்ளிப்படும் செயல், எண்ணம் ( posponment) சோம்பேறிதனம் (laziness ) ஆகிய எதிர்மறை செயல்பாடுகளே ஆகும். (negative attitude / actions)
முன்னேற எண்ணுபவர்கள் இத்தகையவற்றைப்
பற்றி சிந்திக்காமல், எண்ணாமல், செயல்படுத்தாது, முன்னேற வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கவேண்டும். நேர்மறை சிந்தனைகள் சிதறாமல் செயல்படுத்துதில் காட்டவேண்டும்.
எனவே தொடர்ச்சியான மேம்படுத்தலுக்கு எப்பொழுதும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கடமை மட்டும் அல்லாமல் அத்தியாவசியம் என்பதை உணர்ந்து செயல்பாட்டில் காட்டவேண்டும்.
தற்பொழுதும் குறிப்பாக எதிர் வரும் காலங்களில் என்ன என்ன தேவை என்பவற்றை அறிந்து, தெரிந்து அதற்கு உரிய மேம்பாடுகளில் முழு ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது எந்த சூழ்நிலையையும், சந்தர்ப்பத்தையும் கையாள முடியும் தன்னம்பிக்கையோடு.
முடியும் என்று நினைத்து தொடர் மேம்படுதலில் கவனம் செலுத்தினால் முன்னேற்ற பாதையில் உறுதியாக தொடர்ந்து பயணிக்க முடியும்.