கவிதை: உதிர்வன கழிந்தால்... உயிர் மலரும்! வாழ்க்கையை மாற்ற இந்த ஒரு கவிதை போதும்!

Tamil motivational poem
Happy Woman Organizing - Tamil motivational poem
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

நம் வாழ்க்கை நமது கைகளில்தான்!

ஆண்டுகள் அறுபதை

ஒரு ரவுண்டாக்கி

அன்றைய தமிழர்

வகுத்தார் வேதம்!

ஒவ்வோர் ஆண்டையும்

பன்னிரண்டு மாதங்களாய்

ஒருமித்த அவரும்

பிரித்தே வைத்தார்!

ஆங்கில ஆண்டும்

அதனை ஏற்று

அவ்வாறாகவே அதுவும்

ஆண்டினை வகுத்தது!

ஆனந்த வழியை

அகிலம் கொண்டாட

தையும் பெப்ரவரியும்

இணைந்தே உதவும்!

பருவமும் காலமும்

கைகோர்த்த படியே

பலவித உசிதங்களை

அளித்தே சிறக்கும்!

நல்ல வழிகள்

நாற்பதே வந்தாலும்

நமது வாழ்க்கை

நமது கைகளில்தான்!

உடலையும் மனதையும்

ஒருசேர நாமும்

தூய்மைப் படுத்தினால்

சுகமது கிட்டும்!

வேண்டாத களையை

விரைந்து அகற்றினால்

முக்கியப் பயிரும்

முளைவிட்டுப் படரும்!

கடந்த ஓராண்டில்

உடுத்தாத உடைகள்

இனியும் வேண்டாம்

இன்றே அகற்றுங்கள்!

காலாவதி ஆன

எந்தப் பொருளும்

கண்டிப்பாய் வீட்டில்

இருந்திட வேண்டாம்!

பழுதான கேஜட்டுகள்

பயன்படா பிறவும்

அழுக்கைச் சேர்க்கும்

எவையும் வேண்டாம்!

எக்ஸ்ட்ராவாக இருக்குமெதுவும்

உதவாவதாக உள்ளேயிருந்தால்

அவற்றை நீக்கி

அசுத்தம் போக்குங்கள்!

படிக்காத புத்தகங்கள்…

பழைய ரசீதுகள்…

பாதம் காக்காத

நைந்த காலணிகள்…

உழைத்துத் தேய்ந்த

துண்டுகள் ஷீட்டுகள்…

படித்த மெகசீன்கள்…

பழசான பொம்மைகள்…

அழுக்கே ஏறிய

அனைத்துத் திரைச்சீலைகள்…

மங்கிப் போன

மாமாங்க புகைப்படங்கள்…

இவற்றை நீக்கினால்

இல்லம் எழிலுறும்!

குப்பையாய்க் கிடந்து

குழப்பும் இமெயில்கள்…

எப்பொழுதோ ஓப்பன்செய்யும்

முக்கியமற்ற ‘ஆப்’ கள்…

வேண்டாத சந்தாக்கள்…

மறந்தே விட்ட

பழைய ஃபைல்கள்…

இவற்றையெல்லாம் நீக்கிவிட்டால்

எளிதாகும் எலக்ட்ரானிக் வாழ்வு!

நட்பே என்றும்

நல்லது என்றாலும்…

வேண்டா நட்புகள்

விரைவில் மனங்கெடுக்கும்!

அவற்றையும் தவிர்த்தால்

ஆனந்தம் நெருங்கிவரும்!

கைபிடித்த இணையுடனே

கபடமற்று வாழ்ந்திடவும்…

உற்ற பெற்றோரை

உயர்வாய் மதித்திடவும்…

குடும்பந்தான் உலகினிலே

குதூகலத்தின் இடமென்றும்…

உள்ளத்தில் உறுதியேற்றால்

உயர்வாகும் இவ்வாழ்வு!

இதையும் படியுங்கள்:
கவிதை: என்னங்க!
Tamil motivational poem

மாதத் தொடக்கத்தில்

மகிழ்வாய் இவைநடந்தால்…

இவ்வாண்டு மட்டுமல்ல

எவ்வாண்டும் சிறந்திடுமே!

ஊக்கம் உற்சாகம்

உவகை என்றனைத்தும்

வெள்ளமாய்ப் பெருகிவிடும்!

விவேகமாய் வளர்ந்துவிடும்!

logo
Kalki Online
kalkionline.com