நேரத்தை வீணடிப்பவர்கள் மட்டும் படிக்கவும்!

Only Procrastinators read.
Only Procrastinators read.
Published on

வ்வொரு முறை நீங்கள் காலையில் ஒலிக்கும் அலாரத்தை Snooze-ல் போடும்போது, ஜிம்முக்கு செல்வதை தவிர்க்கும்போது, செய்ய வேண்டிய வேலைகளை தள்ளிப் போடும்போது, மேலும் பல முக்கிய செயல்களை செய்யாமலேயே தவிர்க்கும்போது Procrastination என்ற வலையில் சிக்கிய மீன்களில் ஒன்றாக இருக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 

ஏனென்றால் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களை செய்ய வேண்டாம் என முடிவு செய்வதால், காலத்தை வீணடிக்கும் சோம்பேறிகளின் பட்டியலில் நீங்கள் இடம் பெறுகிறீர்கள். 

இதை வில்லியம் ஜேம்ஸ் என்பவர் சிறப்பாக கூறியிருப்பார்:

“நீங்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என முடிவு செய்கிறீர்கள். ஆனால் அதை நீங்கள் செய்யாதபோது அதுவும் உங்களுடைய முடிவாகவே உள்ளது.” 

எனவே, நேரத்தை வீணடிப்பது, தானாக நடப்பதல்ல. அதையும் நாம் தான் தேர்வு செய்கிறோம். நாம் நம்முடைய வாடகையை செலுத்த வேண்டும், கனவுகளை பின்பற்ற வேண்டும், நம்மை மேம்படுத்த வேண்டும் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். இருப்பினும் அதற்கான செயல்களை ஒத்திவைத்து தாமதப்படுத்தி பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறோம். 

நீங்கள் இப்படி உங்களுடைய நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக இருந்தால், உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் இரண்டு சக்தி வாய்ந்த வார்த்தைகள் உள்ளது. இந்த இரண்டு வார்த்தைகளையும் உங்கள் மனதில் நீங்கள் வைத்துக்கொண்டால் நேரத்தை வீணடிப்பது தொடர்பான உங்கள் சிந்தனை முற்றிலும் மாறிவிடும். 

  1. வருத்தம்

ருத்தம் என்பது ஒரு கசப்பான கசாயத்தை குடிப்பது போன்றதாகும். அது சிறிது காலத்திற்கு தன் கசப்பு சுவையை நம்முள் விட்டுச்செல்கிறது. அதேபோல அதைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மோசமான உணர்வை தருகிறது. நீங்கள் தவறவிட்ட வாய்ப்புகள், வீணடித்த நேரம், காதல் தோல்வி போன்றவை மோசமான உணர்வை உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இன்று நேரத்தை வீணடிப்பது உங்களுக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை என்றாலும், 10,20 ஆண்டுகளுக்குப் பிறகு இதனால் உங்களுக்கு ஏற்படுத்தும் வருத்தம் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தும். எனவே வருத்தம் உங்கள் வாழ்க்கையில் நீண்ட தூரம் பயணிக்க அனுமதிக்காதீர்கள். 

இதையும் படியுங்கள்:
யூடியூபில் Ad Blocker பயன்படுத்துபவர்கள் ஜாக்கிரதை!
Only Procrastinators read.
  1. சாதனை

சாதனை உணர்வென்பது நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும் வாங்க முடியாத உணர்வு. நீங்கள் கடினமாக உழைத்த உழைப்பின் சான்றுதான் அந்த சாதனை உணர்வு. அதை உண்மையிலேயே கஷ்டப்பட்டு உழைத்தவர்களால் மட்டுமே உணர முடியும். இது உங்கள் மீது நீங்கள் வைத்துள்ள மதிப்பை மேலும் கூட்டும். கடினமான சூழலிலும் தொடர்ந்து முயற்சிப்பவர்களால் மட்டுமே இந்த சாதனை உணர்வை அடைய முடியும். 

எனவே நேரத்தை வீணடித்து ஒரு கட்டத்தில் எல்லாவற்றிலும் வருத்தத்தை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கான இலக்குகளை தேர்வு செய்து அதற்காக அயராது உழைத்து சாதனை உணர்வை பெற போகிறீர்களா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 

மீண்டும் சொல்கிறேன்! Procrastination தானாக ஏற்படுவதில்லை. நீங்கள் தான் அதை தேர்வு செய்கிறீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com