கவலையை மறந்து வாழ, பதட்டத்தின் பிடியிலிருந்து விடுபட... அற்புத உத்தி!

Overcoming anxiety
Overcoming anxiety
Published on

இன்றைய உலகில் பதற்றம் மற்றும் பயம் போன்றவை பலரின் வாழ்வில் ஒரு பெரிய தொல்லையாகவே மாறிவிட்டது. இதனை சமாளிக்கும் வழிகளை சொல்லும் புத்தகம்தான் Overcoming Anxiety: A Self-Help Guide Using Cognitive Behavioral Techniques. இப்புத்தகத்தின் ஆசிரியர் Helen Kennerley.

எதிர்காலத்தைப் பற்றிய பயம், தேவையற்ற கவலைகள், சமூகத்தில் இயல்பாகப் பேச முடியாத ஒருவகையான கூச்சம் போன்றவற்றால் இந்தப் பதட்டம் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைகளை விஞ்ஞானபூர்வமாகவும், நடைமுறை அடிப்படையிலும் அணுகி, அதிலிருந்து வெளிவர உதவும் ஒரு மகத்தான வழிகாட்டிதான் ஹெலன் கென்னர்லியின் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகம், அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavioral Therapy - CBT) என்ற பிரபலமான உளவியல் அணுகுமுறையாகும். CBT-இன் மையக் கருத்து என்னவென்றால், நம்முடைய எண்ணங்கள் (Thoughts), உணர்ச்சிகள் (Emotions), மற்றும் செயல்பாடுகள் (Actions) ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரு எதிர்மறை எண்ணம் ஒரு பதட்டமான உணர்ச்சியைத் தூண்டி நம்மை அந்த செயலிலிருந்து ஒதுங்க தூண்டுகிறது.

இந்தப் புத்தகம், அந்த எதிர்மறைச் சுழற்சியை (Negative Cycle) எப்படி உடைப்பது என்று படிப்படியாகக் கற்றுக்கொடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் மீது அன்பு செலுத்தும் கலையைக் கற்போம்!
Overcoming anxiety

இது வெறும் தத்துவங்களை மட்டும் சொல்லும் ஒரு புத்தகம் அல்ல; இது ஒரு பயிற்சிப் புத்தகம் போன்றது. கென்னர்லி, பதட்டத்தை எதிர்க்கொள்ள தேவையான விஷயங்களை எடுத்துக் கூறுகிறார்.

உங்கள் மனதில் ஓடும் கவலைகளை அடையாளம் கண்டு, அதனை ஒரு தாளில் எழுதி, அது உண்மையில் கவலைப்பட வேண்டிய விஷயமே இல்லை என்று நிரூபிக்க, ஆதாரங்களைத் தேட இந்தப் புத்தகம் கூறுகிறது. இதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை எதிர்க்கும் ஆற்றலைப் பெறலாம்.

Deep Breathing: பதட்டத்தின் உச்சத்தில் இருக்கும்போது, உடல் ரீதியான மாற்றங்களைச் (அதிகரித்த இதயத்துடிப்பு, வியர்வை) சமாளிக்க எளிய சுவாசப் பயிற்சிகளை எடுத்துரைக்கிறார்.

Gradual Exposure: சமூகப் பயமோ அல்லது குறிப்பிட்ட இடங்களைப் பற்றிய அச்சமோ இருந்தால், அந்தப் பயத்தை மொத்தமாகத் தவிர்க்காமல், சிறு சிறு படிகளாக அதை எதிர்கொண்டு, அச்சத்தை நீக்குவது எப்படி என்று திட்டமிட உதவுகிறது.

இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தாலும், இதில் கூறப்பட்டுள்ள உளவியல் உத்திகள் சர்வதேச அளவில் அனைவருக்கும் பொதுவானவை. இதன் தெளிவான நடை மற்றும் பயிற்சிக் கையேடு போன்ற அமைப்பு, வாசகர்கள் ஒரு மனநல ஆலோசகரின் உதவியை வீட்டிலிருந்தே பெறுவது போன்ற உணர்வைத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
வெற்றிப்பாதையை உருவாக்கும் 12 எளிய மற்றும் பயனுள்ள படிகள்!
Overcoming anxiety

தினசரி கவலைகள், பொது இடத்தில் ஏற்படும் பதட்டம் (Social Anxiety), மற்றும் Panic Attacks ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தப் புத்தகத்தின் மூலம், தங்கள் உணர்ச்சிகள் கட்டுப்படுத்தலாம்.

ஹெலன் கென்னர்லியின் ‘Overcoming Anxiety’ வெறுமனே ஒரு புத்தகமல்ல; அது பல பேருக்கான நம்பிக்கையின் திறவுகோல். உங்கள் மனதின் சக்தியை நீங்கள் தவறாகப் பயன்படுத்தி, கவலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரியவைத்து, அதே சக்தியைப் பயன்படுத்தி அமைதியையும் மகிழ்ச்சியையும் மீண்டும் நிலைநாட்ட இந்தப் புத்தகம் உதவுகிறது.

பதட்டத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, தன்னம்பிக்கையுடன் வாழத் துடிப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய வழிகாட்டி இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com