பைசா கோபுரம் உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்!

Paisa Tower is a life lesson!
Paisa Tower is a life lesson!
Published on

வ்வொரு  அதிசயத்திற்கு பின்னாலும் நிச்சயம் ஒரு கதை இருக்கும்!  அந்த அதிசயம் உருவாக எத்தனையோ பேர்களின் கடின உழைப்பு காரணமாக இருக்கும். அந்த அதிசயங்களைக் கண்டு ஆச்சரியப்படும் அளவிற்கு  நாம் அந்த அதிசயத்தைப் படைத்தவர்களை எண்ணி ஆச்சரியப்படமாட்டோம். பைசா கோபுரத்திற்கு பின்னும் ஒரு கதையுள்ளது. அந்த ஆச்சரியமூட்டும் கதையைப் பற்றித்தான் இந்தத்தொகுப்பில் பார்க்க உள்ளோம் .

பைசா நகரின்  சாய்ந்த கோபுரம் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறு வயதிலிருந்தே பாடப் புத்தகத்தில் உலக அதிசயங்களில் ஒன்று என்று பைசா கோபுரம் பற்றி படித்திருக்கிறோம். பைசா கோபுரம் சாய்ந்திருக்கிறதே;  ஏன் விழவில்லை என்று நீங்கள் யோசித்ததுண்டா? அதன்பின் உள்ள கதையை தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டதுண்டா ?

த்தாலியில் மணிகூண்டு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் 1173ம் ஆண்டு Guglielmo மற்றும் Banonno pisano ஆகியோரின் வடிவமைப்புடன் பைசா கோபுரத்தின் கட்டுமானம் தொடங்கியது. முதல் இரண்டு தளங்கள் வரை எந்தத் தடங்கலும் இல்லாமல் கட்டுமானம் நன்றாகவே சென்றது.  1178ம் ஆண்டில் மூன்றாம் தளம்  கட்டி முடிக்கும் நிலையில்தான் தெரிந்தது, கோபுரம் சற்று சாய்கிறது என்று. அதற்குபின்னர்தான் தெரிய வந்தது கோபுரம் கட்ட ஆரம்பித்த இடம் களிமண் நிறைந்த இடம் என்பது.  

பொதுவாக களிமண்ணில் கடினத்தன்மை குறைவு என்பதால் கோபுரம் தன் உறுதியை இழந்தது. மேலும், கோபுரத்தின் அடிதளத்திற்கு  3 அடி ஆழம் மட்டுமே தோண்டியது மிகப் பெரிய சிக்கலாகிப் போனது. ஆகையால் மூன்றாவது தளம் முடியும்பொழுதே கோபுரம் உறுதித்தன்மையை இழந்து சாயத் தொடங்கியது. இதற்கு என்ன செய்வது என்று அறியாமல் திணறிக்கொண்டிருந்த பொறியாளர்கள் களிமண் இறுகும்வரை காத்திருக்கலாம் என்று 100 ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்தார்கள்.

மீண்டும் 1272ம் ஆண்டு நம்பிக்கையுடன் மேலும் 4 தளங்கள் அமைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனால், 1284ம் ஆண்டு போர் காரணமாக கட்டுமானம் பாதியுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு 1372ம் ஆண்டுத்தான் ஒருவழியாக பைசா  கோபுரத்தின் கட்டுமானம் முழுவதுமாக முடிவடைந்தது.

200 வருட போராட்டம் முடிந்தது என்றிருந்த நிலையில் 19ம் நூற்றாண்டின் மத்தியில் மீண்டும் கோபுரம் சாய்ந்தது. சாய்ந்த திசையின் எதிர்திசையில் 800 டன்கள் பிடிமானம் வைத்து சமன் செய்தார்கள் பொறியாளர்கள். இந்த நிலையில்தான் உலகப்போர் நடைபெற்றது. அப்போரில் இத்தாலியில் எவ்வளவோ கட்டடங்கள் இடிந்து விழுந்தன. ஆனால், பைசா கோபுரம் மட்டும் எந்த சேதமும் இல்லாமல் கம்பீரமாக அப்படியே சாய்ந்து நின்றது!  இந்த மாபெரும் அற்புதம் நடந்த பின்னர்தான் பைசா கோபுரத்தை காப்பாற்றி பாத்துகாக்க வேண்டும் என்று அதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்தது இத்தாலிய அரசாங்கம். உலகின் அதிசயமாக இருக்கும் இந்த கோபுரத்தை அதன் பின்னர்தான் தினமும் 1 மில்லியன் பேர் பார்க்க வந்தார்கள்.

துவும் சிறிது காலம்தான் நிலைத்தது. கணினி வியூகத்தின்படி 5.44 டிகிரி சாயும் வரை எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், 1990ம் ஆண்டு 5.5 டிகிரி வரை கோபுரம் சாய்ந்தது. இது பேராபத்து என்று கருதிய கட்டட நிபுணர்கள்  என்ன  செய்வது என்றறியாமல் அந்த இடத்திற்கே யாரும் செல்லாதபடி தடைவிதித்தார்கள்.

கோபுரத்தின் சாய்வைக் குறைக்க பெரும்பாடுபட்டார்கள். முடிவில், 1990ம் ஆண்டு, 5.5 டிகிரி சாய்ந்திருந்த நிலையில், 2001ம் ஆண்டு 3.99 டிகிரியாக அந்த சாய்வு குறைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் எளிய வழிகள்!
Paisa Tower is a life lesson!

இதன் பின்னர் மூடிவைக்கப்பட்டிருந்த பைசா கோபுரம் பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.

குறையிலும் நிறைவுள்ளது! நாம் எத்தனை தடைகள் வந்தாலும் சற்று சாயலாமே தவிர விழுந்துவிடக் கூடாது என்பதற்கான உதாரணம்தான் இந்த பைசா கோபுரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com