வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் ஆர்வமும் அர்ப்பணிப்பும்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

ரு பணி குறித்தோ நோக்கம் குறித்தோ உறுதியாக ஆழ்ந்த ஈடுபாட்டுடன் விடாது செயல்படுவது அர்ப்பணிப்பு. அப்பணி குறித்து தீவிர ஆர்வம் உள்ளபோதுதான் முழு மனதுடன் செயல்பட முடியும். ஆர்வமும், அர்ப்பணிப்பும் வெற்றியை பெறுவதற்கு தேவையான முக்கிய குணங்கள். இக்குணங்கள் இல்லாதபோது காலம் தாழ்த்தாது, உடல் வலி பாராது அதிக வல்லமையுடன் பணிகளை செய்வது தடைப்படும். எந்த வேலையை செய்யும் போதும் அந்த வேலை குறித்து ஆர்வமும் அர்ப்பணிப்பும் உள்ளபோது வேலைப்பளு மறைந்துவிடும். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வேலைகளை செய்தால் மிகப் பெரும் சவாலான பணிகளை கூட செய்து விட முடியும்.

முழு மனதுடன் ஆழ்ந்த ஈடுபட்டுடன் செயலை செய்து முடிப்பதை குறிக்கோளாய், உடலையும் மனத்தையும் குறிக்கோள் நோக்கி ஒன்றிணைத்து பயணித்தால் எத்தகைய பெரிய இலக்கும் சாதிக்க கூடியதாக மாறிவிடும். மனதில் அர்ப்பணிப்பும் ஆர்வமும் உள்ளபோது தடைகள் மறைந்துவிடும். புதுப்புது வழிகள் தோன்றும். தோல்விகள் நிலைகுலைய வைக்காது. திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான ஆர்வம் மேலோங்கும். வெற்றிகள் நம் வாசலை தேடிவரும். ஆழ்ந்த அர்ப்பணிப்பு இல்லாமல் பெரிய வெற்றிகளை குவிப்பது இயலாத காரியமாக மாறிவிடும்.

ஒரு குறிக்கோள் மீது அர்ப்பணிப்பு உள்ளபோது தேவையற்ற செயல்களில் நேரத்தை விரயம் செய்ய மாட்டோம். பெரிய பெரிய சாதனைகள் எல்லாம் திடீரென நடைபெறவில்லை. மற்றவர்கள் ஓய்வு எடுக்கும்போது ஆர்வத்துடன் சிலர் உழைத்ததால்தான் அந்த சாதனைகள் உருப்பெற்றன. விளையாட்டு வீரர்களை பார்த்திருக்கின்றோம். மற்றவர்கள் வீணாக நேரத்தை செலவிடும்போது அவர்கள் முழு மன ஈடுபாட்டுடன் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். பயிற்சியில் கூட மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுகிறவர்களே மற்றவர்களை விட சிறந்தவர்களாக மாறிவிடுகின்றனர். வெற்றி பரிசுகள் பெறுகின்றனர். வெற்றிக்கு இட்டுச் செல்லும் நேரான தெளிவான பாதையை அர்ப்பணிப்பு.

சூழல் கடினம் ஆகும்போது பணி குறித்த கண்ணோட்டத்தை மாற்றி சவால்களை சாதிக்கும் வாய்ப்பாக பார்த்தால் அச்சவால் குறித்த ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். பெரிய இலக்கை சிறுசிறு இலக்குகளாக பிரித்து அந்த சிறு இலக்குகளை அடைய வேண்டும் இதன் மூலம் வெற்றி ஒரு தொடர்கதை ஆகிறது. முயற்சியின் ஆர்வமும் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் 21 - உலக மூத்த குடிமக்கள் தினம்! முதுமையால் இனிமையாகும் வாழ்க்கை!
motivation article

புதியவற்றை அரவணைக்க வேண்டும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்பவேண்டும். முடியும் என்ற உறுதியுடன் முயற்சியில் ஈடுபட வேண்டும். தோல்விகளை கண்டு கலங்காமல் அவற்றிற்கு அளவுகடந்த முக்கியத்துவம் தராமல் அத்த தோல்விகள் தரும் பாடங்களை கற்று முன் செல்ல வேண்டும். சுய பரிதவிப்பை தவிர்க்கவேண்டும். தோல்விக்கு அடுத்தது வெற்றி என்ற நம்பிக்கையில் ஆர்வமுடன் செயலாற்ற வேண்டும்.

வெற்றிபெற ஊக்கமூட்டும் செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் அதற்கு உகந்த புத்தகங்களை படிக்கவேண்டும். எதிர்மறையாக பேசுபவர்களை விட்டு ஒதுங்கவேண்டும் நோக்கத்தில் தெளிவாக எப்போதும் இருக்கவேண்டும். இவற்றையெல்லாம் செய்யும்போதே உங்கள் அர்ப்பணிப்பு தானாக அதிகரிக்க ஆரம்பித்து வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com