தோற்றப்பொலிவில் கவனம் கொள்ளுங்கள்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

ரு மனிதரைப் பார்த்த உடனே அவர் தோற்றத்தைக் கொண்டே அடுத்தவர் மனம் அவரைப் பற்றி எடை போட்டு விடுகிறது. அழுக்கான ஆடை, வாரப்படாத தலை, மழிக்கப்படாத தாடி, குளிக்காத உடல், குழி விழுந்த கண்கள் கொண்டவர் என்னதான்  அறிவாளியாக அதிகம் படித்தவராக இருந்தாலும் யாராவது மதிப்பார்களா? கண்டும் காணாததுபோல் கடந்து போவார்கள். காரணம் தன் தோற்றப் பொலிவில் அக்கறை கொள்ளாதவன் தோல்வி மனப்பான்மை கொண்டவனாகவே இருப்பான்.

வெற்றி மனப்பான்மை கொண்டவன் முகத்தில் நம்பிக்கை சுடர் விட்டு எரிவதைக் காணலாம். கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்களை அதிர்ஷ்டம் அடுத்தடுத்து தேடிவரும். அவர்களுக்குத்தான் உயர் பதவிகள் கிடைக்கும். முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் தொடர்ந்து வரும்.

வசீகரத் தோற்றத்துடன் அறிவு, திறமை நிரம்பியவனை அனைவரும் மதித்து போற்றுவார்கள். தோல்வி, ஏமாற்றம் போன்றவை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கூட சிறிதும் பதட்டப்படாமல் அமைதியாக தன் வேலையை தொடர்ந்து செய்து வருபவனுடைய தோற்றம் எடுப்பாகவும், கம்பீரமாகவும் அமையும். இப்படிப்பட்டவர்களே தலைமை பொறுப்புக்கு தகுதி உடையவர்களாக ஆகிறார்கள்.

வெறுப்பு, குரோதம் ஆகியவற்றை எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பவன் தரைதட்டிய கப்பல், அச்சாணி முறிந்த தேர் .நின்ற இடத்திலேயே நிற்பான். பயம் கலக்கம் ஆகியன அவனுக்கு வயதான தோற்றத்தை உண்டாக்கிவிடும். அரைக் கிழவனாக ஆகிவிடுவான்.

அன்பு, பாசம் கொண்டவர்களின் தோற்றம் குழந்தைகளை கூட கவரும். எப்போதும் சந்தோஷ மனநிலையில் இருப்பவனிடம் கவலையின் சாயல் நெருங்காது. சாந்தமாகவும் இனிமையாகவும் பேசுபவர்களை எல்லாரும் விரும்புவார்கள்.

யாருடைய மனதையும் புண்படுத்தாமலும் ஒருவன் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்காமலும் கவனமாக செயல்பட்டு வருபவர்களுக்கு ஆபத்துக் காலங்களில் நிறைய பேர் தாங்களாகவே வந்து உதவி செய்ய முன்வருவார்கள்.

இதையும் படியுங்கள்:
இலக்கை நோக்கி பயணியுங்கள். வெற்றியை நினைத்து மகிழுங்கள்!
motivation article

ஒருவனுக்கு வேலை உயர்வு கொடுப்பது அவனது மேலதிகாரியின் கையில்தான் உள்ளது. தன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகளை கவரும்படி ஒருவன் நல்ல உடை அணிந்து கம்பீரமாக காட்சி தரவேண்டும். முகத்தில் புன்சிரிப்பு மலரும் போதுதான் ஒருவனது உடை முழுமை அடைகிறது என்பார் ஒரு அறிஞர்

வெளித்தோற்றத்தைப் போன்றே உள்ளத்தையும் ஒருவன் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். அங்கே பொய், சூது, சூழ்ச்சி, வஞ்சகம், வெறுப்பு, பயம், சந்தேகம் போன்ற பாம்புகளையும் தேள்களையும் உள்ளத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது.

ஒருவரது உடை மட்டுமல்லாமல் அவரது பேச்சும் நடத்தையும் கூட ஒருவரைப் பற்றிய கருத்தை உருவாக்குவதால் இவை அனைத்தையுமே ஒருவன், வெளி உலகினரோடு பழகும்போது கவனமாக இருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com