உடல் நலக்குறைவும், மன நலக்குறைவும் முன்னேற தடையல்ல. அமெரிக்க ஜனாதிபதிகள் உணர்த்திய பாடம்!

அமெரிக்க ஜனாதிபதிகள்...
அமெரிக்க ஜனாதிபதிகள்...

ம்மில் பலர் ஏதாவது உடல் நலக்குறைவு என்றால் மூலையில் முடங்கிவிடுவோம். ஆனால், அமெரிக்க ஜனாதிபதிகளில் பலர் தம் பதவி காலத்தில் உடல் நலக்குறைவுடன் பணியாற்றி சாதித்துள்ளனர் என்பது தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதிகளில் 37 பேர்களில் 18 பேர் மனநிலை பாதிப்புக்குள்ளானவர்கள் என்கிறது டியூக் மனோவியல் ஆராய்ச்சி நிறுவனம். காரணம் அவர்களுக்கு பதவி காலத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்தான் என்கிறார்கள். 18 அமெரிக்க ஜனாதிபதிகளில் 10 பேர் மனநோயால் அவதிப்பட்டுக்கொண்டேதான் தங்களது பதவி காலத்தையும் கழித்தார்கள். சாதிக்கவும் செய்தார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்க ஜனாதிபதிகளில் 11 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களில் 4 பேருக்கு அவர்களின் பணிக்காலத்தில் அது நேர்ந்தது.

அமெரிக்காவின் 22 மற்றும் 24ம் ஜனாதிபதியாக இருந்தவர் குரோவர் கிளீவ்லாண்டு. இவரின் பதவி காலத்தில், 1893ம் ஆண்டு, அவருக்கு வாயில் புற்றுநோய் வந்தது. ஜனாதிபதிக்கு கேன்சர் என்பது வெளியே தெரியக்கூடாது என்று அவருக்கு நெருங்கிய நண்பர்கள் அவரை மீன் வேட்டைக்கு என்று அழைத்துச்சென்று ஒரு படகில் வைத்து ஆபரேஷன் செய்து அன்று புற்றுநோயை சரி செய்தார்கள். இது அவர் மரணமடைந்து 15 வருடங்களுக்கு பிறகே வெளியே தெரிய வந்தது.

குரோவர் கிளீவ்லாண்டு
குரோவர் கிளீவ்லாண்டு

அமெரிக்காவின் 28வது ஜனாதிபதியாக இருந்தவர் உட்ரோ வில்சன். இவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்பே பல முறை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர். 1919ல் இவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனபிறகு தீவிர பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். இதனால், இவரின் இடதுபுறம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு செயல் இழந்தது. இருப்பினும் அவர் ஜனாதிபதியாக தொடர்ந்தார். தனது இரண்டாவது மனைவி எடித் மூலம் தன்னுடைய எண்ணங்களையும், உத்தரவுகளையும்  தன் மந்திரிசபையினருடன் பரிமாறிக்கொண்டார். அவர் மனைவி அப்போது மிடியேட்டராக செயல்பட்டார்.

அமெரிக்காவின் 32 வது ஜனாதிபதியாக வலம் வந்த பிராங்ளின் டெலினோ ரூஸ்வெல்ட் போலியோவால் தாக்கப்பட்டு வீல் சேரில் ஜனாதிபதியாக வலம் வந்தவர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு முற்றிய நிலையில் இதயநோயும், உயர் இரத்த அழுத்த நோயும் இருந்தது பலருக்கு தெரியாது. அந்த நோய்களின் தாக்கத்துடனேயே ஆட்சியில் பல சாதனைகளைச் செய்தார். பின்னர் மூளை புற்றுநோய் வந்து இறுதி நாட்களை அவஸ்தையுடன் கழித்தார்.

அமெரிக்காவின் 35வது ஜனாதிபதியாக தன் இளம் வயதில் ஜனாதிபதி ஆன ஜான் எஃப் கென்னடி இளமை துடிப்புடன் ஜனாதிபதியாக பணியாற்றினார். ஆனால், இளம் வயதிலேயே ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தவர். அதோடு தைராய்டு பிரச்னையால் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். பற்றாக்குறைக்கு ‘அடிசன் நோய்' வேறு. தினமும் ஸ்டிராய்டு மருந்துகள் போட்டுக்கொண்டுதான் ஜனாதிபதியாக வலம் வந்தார்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் காக்கும் எலுமிச்சம் பழத்தின் நன்மைகள்!
அமெரிக்க ஜனாதிபதிகள்...

அமெரிக்காவின் 40 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரொனால்டு ரீகன் பதவி வகித்து முடிந்து சில நாட்களிலேயே அல்சிமர்ஸ் எனும் மறதி நோய் தாக்கப்பட்டு அவதிப்பட்டார். ஆனால், அதன் அறிகுறிகள் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்னரே மூளையில் அதன் அறிகுறிகளைக் காண்பிக்க தொடங்கிவிடும் என்கிறார்கள்.

ரொனால்டு ரீகன்
ரொனால்டு ரீகன்

அமெரிக்காவின் 26வது ஜனாதிபதியான தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் அமெரிக்காவின் 36வது ஜனாதிபதியான லிண்டன் பி ஜான்சன் என்ற இரு அமெரிக்க ஜனாதிபதிகளும் ‘பை போலார் டிஸ்ஆர்டர்' (bipolar disorder) எனும் மன நோய்க்கு ஆளாகி அவதிப்பட்டு வந்தவர்கள்தான்.

இப்படி உடல் நலக்குறைவும், மன நலக்குறைவும் முன்னேற்றத்திற்கு தடைகள் அல்ல என உணர்த்திய பலர் அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com