வாழ்வில் உயர பெரிய காரியங்களை நிகழ்த்த திட்டமிடல் அவசியம். அத்திட்டம் உங்களை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும். எந்தச் செயலைச். செய்தாலும் அது முழுமை பெற்றதாகவும், குறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முயற்சிக்க வேண்டும். பெரிய செயல்களைச் திட்டம் வகுக்கும்போது எண்ணங்களும் பெரிதாகத்தான் இருக்கவேண்டும்.
பெரிய எண்ணங்கள் எல்லாம் உயர்ந்த எண்ணங்கள் அல்ல. பெரிய முடிவுகள் பற்றிய எண்ணங்களுடன் அம்முடிவுகளை அடைவதற்குச் சரியான கண்ணியமான, சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைகள் வேண்டும் எனவும் பின்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்து என்று முடிவெடுத்துச் செயல்படுத்தும் எண்ணமே உயர்ந்த எண்ணம். உயர்ந்த எண்ணங்கள் பெரிய எண்ணங்கள் ஆகலாம். ஆனால் பெரிய எண்ணங்கள் எல்லாம் உயர்ந்த எண்ணங்கள் ஆவதில்லை.
பெரிய காரியங்களை சாதிக்க உயர்ந்த எண்ணங்களைக் கொண்டிருப்பது எல்லோராலும் மெச்சப்படும் குணமாகிறது. பெரிய காரியங்களை சாதிக்க வேண்டும் என்ற விடாப்பிடியுடன் முயலும்போது உங்கள் எண்ணங்கள் உங்கள் முயற்சியின் பக்க பலமாக இருந்து உங்களை உயர்த்தும்.
உங்கள் எண்ணங்களே உங்கள் செயல்களை செய்விக்கும் முதலாளி. செயல்களின் பாதையில் தடைகள் ஏற்பட்டாலும், முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை தராவிட்டாலும், எண்ணங்கள் உயர்வாக இருக்கும்போது புதிய கண்ணோட்டத்துடன் செயல்களைக் காணலாம்.
1888ம் வருடம் ஒருநாள் தன் புகைப்படத்தை இரங்கல் செய்தியில் கண்டு வியப்பைத்தார் ஸ்வீடனைச் சேர்ந்த ஆல்ஃப்ரெட் நோபல். மரணத்தின் வியாபாரி என அந்தச் செய்தி குறிப்பிட்டிருந்தது. ஆல்பர்ட் சகோதரர் இறந்த செய்தியை தவறுதலாக ஆல்ஃப்ரெட் இறந்ததாக அச்சடிக்கப்பட்டிருந்தது. ஆல்ஃப்ரெட்டின் கண்டுபிடிப்புகளை கண்டனம் செய்த அந்த இரங்கல் செய்தி, எதிர்காலத்தில் அவர் எப்படி நினைவு கூறப்படுவார் என்ற பயத்தை ஆல்பர்டுக்கு ஏற்படுத்தியது. ஆல்பர்ட் 355 கண்டுபிடிப்புகளுக்கு மேல் காப்புரிமை பெற்று பெரிய செல்வத்தை சேர்த்திருந்தார்.
தவறாக வந்த செய்தி அவரை சிந்திக்க வைத்தது. இரங்கல் செய்தியில் தெரிவித்தபடி எதிர்காலம் தன்னை நினைவில் கொள்ளக் கூடாதென்று தீர்மானித்தார். தம் உயிலில் தன் செல்வங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் "மனித குலத்தின் மிகப்பெரிய நன்மைகள்" இயற்பியல், வேதியியல் ,மருத்துவம், இலக்கியம், உலக அமைதி ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசாக வழங்க விருப்பம் தெரிவித்தார்.
அவர் இறந்த பின் அவர் விரும்பியபடி நோபல் அறக்கட்டளை துவங்கப்பட்டு இன்றளவும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் எப்படி நினைவில் இருக்க விரும்புகிறீர்கள்?