motivation imageImage credit - pixabay
Motivation
கவிதை - சிட்டுக்குருவி தலையில் பனங்காய்!
வாழுங் காலத்து
வாழ்ந்திடத் தேவை
உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க இடம்
இருந்தால் சிறப்பு.
நாள் முழுதும்
நேர்த்தியாய் உழைப்பு.
விடியலில் எழுந்து
வேலை தேடல்.
கிடைத்தால் நிரம்பும்
கஞ்சியால் அரைவயிறு.
இளமையில் உடலுரம்
இயல்பாய் இருக்க
களைப்பின்றி
உழைக்கலாம்.
கட்டுடல்
குலையும்.
முதுமையில் தள்ளாமை
முயன்றாலும் முடியாது.
இதையறியா வயிறோ
இழுத்துப் பிடிக்க
வாட்டத்தோடு அமர்வு
வேதனை பார்வை.
வேலை கிடைத்தாலும்
விகம்பிதம் கைகளில்.
செய்வதறியாது
சோர்ந்து கிடத்தல்.
ஒடியாடி உழைத்து
ஒருகுடி காத்தவன்
இன்று யாருமின்றி
இன்னலில் துடித்தல்.
இருப்பதைப் பகிர்ந்து
வருத்தத்தில் வாழ்க்கை.