கவிதை - தொலைதூர வெளிச்சம்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

-    ராதா ரமேஷ்

சோர்ந்து போகும் மனமே!

 துவள வேண்டாம்!

 பலவீனமாகும் இதயமே!

 வருத்தம் வேண்டாம்!

 தளர்ந்து போகும் கால்களே!

 தடைகளால் தளர வேண்டாம்!

 வெற்றி என்பது ஏட்டுக்கனி அல்ல!

 அது எட்டா கனியும் அல்ல  !

 தேவை தொடர் முயற்சியே!

 மூச்சை போல் அதனை சுவாசி!

 முயற்சியும் பயிற்சியும் உன் 

 ரத்தத்தில் கலக்கட்டும்!

 நடை போட கால்களும் தாங்கிக் 

 கொள்ள இதயமும் 

 இணை சேரட்டும்!!

 விமர்சனங்கள் வரலாம்!

 உனக்குள் முளைக்க இருக்கும்

 விதைக்கு அதனை உரமாக்கு!

 தோற்கும் போது தூற்றும் உலகம்

 வெற்றியில்  மௌனமாய் மாறும்!

 வாழ்த்து சொல்லக்கூட வார்த்தை இருக்காது அதனிடம்!!

 இந்த வாழ்க்கை உனக்கானது!

 இந்த வலிகள் உனக்கானது!

 அதனால்நீ அடையும் வெற்றியும் உனக்கானது!!

 தொடர்ந்து ஓடு!

 தொலைதூர வெளிச்சம் 

 உனக்கு துணையாகும் வரை......

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com