வளா்ந்து வரும் விஞ்ஞானம்
கூடவே விபரீதம் தாங்கி வருகிறதோ பயம்!
மனிதன் இயந்திரத்தோடு
நேரத்தை செலவிடுகிறான்
சக மனிதர்களோடு நோில் பேச நேரமில்லையாம்,
உள்ளங்கையில் உலகம் உண்மைதான்!
அதுவே இல்லம் தோறும் என்ற நிலை,
விபரீதத்தின் விளை நிலமே,
ஊன் உறக்கம் தொலைத்தவன்
வாழ்க்கையையும் தொலைக்கிறான்,
கேட்டால் இது தான் வாழ்க்கை என்கிறான்,
அதுதான் விஞ்ஞான வளா்ச்சியாம்
ஒரு நொடியில்,
ஒரே நொடியில் அனைத்தும், வசமாகிவிடுமாம்.
பத்தாம்பசலித்தனம் தவிா்க்கனுமாம்!
நல்ல செயல்களுக்கு பயன்படும் கருவிகள் தீயதெனும் தீயை
தீவிரமாய் வளா்க்கிறது.
வளா்ப்பதும் அச்சம், வளா்வதும் அச்சம்தான் ,
மனிதா மனம் மாறிடு
எதற்கும் ஒரு எல்லையும் வடிகாலும் உண்டு,
அதுவே நிதானம் !
எல்லை தான்டாதே மனிதா எல்லாம் இழந்திடுவாய்,
இருக்குமுன் காவாமல் இழந்த பிறகு ஏன் ஞானோதயம் ,
கோபதாபம் குறைத்தாலே மனதின் வலி மறையும்
எதையும் கடந்து போக கற்றுக்கொள்,
ரெளத்ரம் பழக வயதில்லை,
ருத்ரம் படிக்க மனதில் ஆசைதான்
உடலின் வலிமை வளமிழந்து விட்டது.
மனிதநேயம் மறித்திடாமல் பாா்
வாழ்ந்து கெட்ட நிலைசமுதாயத்தின்
பாா்வையில்தான் ஏளனம் ஓராயிரம் ,
வாழவேண்டுமென ஆசைதவிா்,
இறைவழி தேடு,
ஆரோக்கியம் கெட்டால் அனைத்தும் கெட்டிடும்,
அடுத்தவர் கை எதிா்பாரும் நிலை வந்தால் மரணம் வேண்டிடு
அதுவே நல்லது, அதுதான் நல்லது, அதுதான் அனைவர்க்கும் நல்லது,
இறைவன் மிகப் பொியவன்,
எதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகட்டும்!!