கவிதை - கனவு மெய்ப்படுவது எப்போது?

Motivation Image
Motivation Imagepixabay.com
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

கனவு விழிமூடக்

காண்பது அன்று.

அன்றன்று உறக்கத்தில்

வருவது விழிப்பில் மறையும்.

மறைந்ததை நினைந்திட

உறையும் மனம்.

மனந்தனில்  இலக்கினை

மனதார நினைந்திடு.

நினைத்ததைச் செயலாற்றிடச்

சோராது உழைத்திடு.

உழைத்திட வந்திடும்

களைப்பை அகற்றிடு.

அகற்றிடு எதிர்மறை

எண்ண அலைகளை.

அலைகள் அடங்கினால்

அமைதியாகும்  மனம்.

மனம் தெளிவாகிட

மெய்ப்படும் நம் கனவு.

செ.கலைவாணி

மெல்போர்ன்.

logo
Kalki Online
kalkionline.com