
நாம் பதவியில், பெரிய பொறுப்பில் இருக்கும்போது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்".
எப்போது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே, நாம் ஒதுக்கப்படுவோம், நமக்கு தந்த உறுதி மொழிகள் காற்றில் பறக்க விடப்படும்.
கொடுத்த மரியாதைகள், உறுதிமொழிகள், வாக்குறுதிகள் எல்லாம், உங்களுக்காகக் கொடுக்கப் பட்டது அல்ல. அது உங்களை அலங்கரித்தப் பதவிக்குக் கொடுக்கப்பட்டது.
ஆம். உண்மைதான். அதற்கு தகுந்த உதாரணம், நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருந்த புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger) அர்னால்டு.
அவர் பதவியில் இருக்கும்போது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலைத் திறந்து வைத்தார்.
ஹோட்டலின் திறப்பு விழாவின்போது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் சொன்னார்…
அர்னால்டு அவர்களே! ''நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு எப்போதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார்.
நாட்கள் நகர்ந்தன. அர்னால்டுக்கு பதவி போனது, புகழ் போனது, சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது. தற்போது அறைகள் ஏதும் இல்லை என்று கூறியுள்ளது ஹோட்டல் நிர்வாகம்.
அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரோ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்".
மனமுடைந்த அர்னால்ட், தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக் கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்காரப் பொருளாக நின்று கொண்டு இருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்.
பதவி, அதிகாரம் இருந்தால் மட்டுமே விழுந்து, விழுந்து வணங்குவதும், இவைகள் இல்லாவிட்டால் கேவலமாகப் பார்ப்பதும்தான் இந்த உலகம்.