Poverty...
Poverty...Image credit- pixabay

வறுமையே முன்னேற்றத்திற்கு முதல் படி!

Published on

றுமை முன்னேற்றத்திற்குத் தடைக் கல்லாக இருந்ததே கிடையாது. அதுதான் வெற்றிக்கு அழைத்துச் செல்லும் ஒளிப்பாதையாக இருந்தது.

இன்று புகழேணியில் கொடிகட்டிப் பறக்கும் பலரும் வறுமையின் பிடியில் அகப்பட்டு மோதியவர்கள்தாம். இதற்குப் பலரை உதாரணமாக கூற முடியும். இளம் வயதில் தந்தையை இழந்து  சொல்ல முடியாத வறுமை, குறைவான பள்ளிக்கட்டணத்தைக் கட்ட முடியாமல்  ஒரு நாள் சோப்பு வாங்கக் கூட கையில் காசு இல்லை. 

அழுக்குத் துணியைப் போட்டுக் கொண்டு பள்ளிக்குப் போனார். வெட்கம் பிடுங்கித்தின்றது. வகுப்பின் ஒரு மூலையில் உட்கார்ந்த இவரைப் பார்த்த ஆசிரியர் கோபப்பட்டு உனக்கு வெட்கமாக இல்லையா? அபராதம் எட்டணா! என்றார். 

இதைக் கேட்டதும் அவருக்குத் தலை சுற்றியது. ஒரு அணா கொடுத்து சோப்பு வாங்க முடியாதவர் எப்படி எட்டணா அபராதம் கட்ட முடியும். பள்ளிக்குப் போகாமல் ஆசிரியரிடம் நிலைமையை எடுத்துக் கூறினார்.

அழுக்குச் சட்டை அணிந்து பள்ளிக்குச் சென்று எட்டணா அபராதம் கட்ட முடியாமல் தவித்தவர் பிற்காலத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக விளங்கியவரும், ஆங்கிலேயரும் அதிசயம் அடையும் வண்ணம் அழகாக அற்புதமாக ஆங்கிலத்தில் பேசியவருமான ரைட் ஹானரபில் சீனிவாச சாஸ்திரியார்.

"சண்டைக் காலங்களில் ரொட்டிக்கடையின் முன் நான் க்யூவில் நின்று இலவசமாக அளிக்கப்படும் ரொட்டிக்காகக் காத்திருப்பேன். அந்த வயதில் எனக்கும் பசிதான் முக்கியமாக இருந்தது.

கொட்டும் மழையில் நின்று கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரைப் பிடித்து கியூவில் நின்று வாங்கிய ரொட்டியை அதில் ஊறவைத்துச் சாப்பிட்டு இருக்கிறேன்," என்று கூறும் நடிகை யாரென்றால் ஹாலிவுட்டில் கோடி கோடியாய்ப் பணத்தைச் சம்பாதித்த சோபியா லாரன்.

அயல் நாட்டில் மட்டுமல்ல, நம்முடைய நாட்டிலும் கூட நடிகர்கள் பலரும் வறுமையில் சூழப்பட்டு முயற்சியினால் உந்தப்பட்டு உயர்வடைந்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கடின உழைப்பே எதிர்பார்த்த பலனைத்தரும்!

Poverty...

இதற்கு ஒருவர் அல்லது இருவர் விதி விலக்காக இருக்க முடியும். ஆசியாவிலேயே அற்புதமாக நடிப்பு ஆற்றலைப் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன பல நாட்கள் உணவின்றிப் பட்டினியோடு இருந்திருக்கிறார்.

சாப்பாட்டிற்கு வழி செய்ய வேண்டுமே என்ற கட்டாயத்தின் பேரில் நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவர் பெண் வேடம் கூட போட்டு இருக்கிறார்.

முயற்சி உடையுமை இறைவனின் கட்டளையாகும். இறைவன் விதித்திருப்பதை முயற்சியினாலேயே அடைய முடியும். மிகப்பெரிய மனிதர்களும் நம்மை போன்றே வறுமையின் பிடியில் அல்லல்பட்டு முயன்றவர்கள்தான் என்பதை இப்பதிவு தெளிவாக விளக்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com