பிரச்னைகள் எங்கும் உண்டு... எதிலும் உண்டு!

Problems... sollutions!
Problems are everywhere.Image credit - pixabay
Published on

பிரச்னைகள் அது இல்லாத இடம் எங்கே இருக்கு யாரிடம்தான் பிரச்னைகள் இல்லை இங்குதான் பிரச்னை இல்லை. எல்லா இடங்களிலும் பிரச்னைகள்தான் ஆனால் அதைக்கண்டு ஓடி ஒளியக்கூடாது. பிரச்னைகள் இல்லை என்றாலும் வாழ்க்கையில் முன்னேற்றமும் இருக்காது என்பது நிசத்தனமான உண்மை.

நமக்கு வரும் எந்தெந்த ரூபத்திலாவது பிரச்னைகளை எப்படி சமாளிப்பது எல்லா உயிரினங்களுக்கும் பிரச்னை உண்டு என்பதை உணர்த்தும் ஒரு சின்ன கதைதான் இது

ஒரு சமயம் முயல்கள் எல்லாம் ஒன்று கூடின. எவ்வளவுதான் நாம் வேகமாக ஓடினாலும் வாழ்நாள் முழுவதும் எதிரிகளைக் கண்டு ஓடி ஒளிய வேண்டியிருக்கிறதே. எனவே, பேசாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தன. தற்கொலை செய்வதற்காக ஒரு நாளும் குறிக்கப்பட்டது. அத்தனை முயல்களும் சோகத்தோடு மலையில் ஒன்று கூடின. சேர்ந்து மலை உச்சிக்குச் சென்றன. மலை உச்சியிலிருந்து தற்கொலை செய்து கொள்வதற்காகத் தலையை நீட்டிப் பார்த்தன.

அப்போது மலைப்பகுதியில் வசித்து வந்த தவளைகள் முயல்களைக் கண்டதும் தங்கள் தலைகளை உள்ளே இழுத்துக்கொண்டு பயந்து ஒளிந்தன. 'வாழ்க்கையே வேண்டாம்' என்று வெறுத்த முயல்கள் இதைக் கூர்ந்து கவனித்தன. உலகில் அச்சம் மிகுந்த வாழ்வு தங்களுக்கு மட்டுமல்ல, தங்களைக் கண்டு தவளைகளும் அஞ்சி வாழ்கின்றன என்பதைப் புரிந்து கொண்டன. எனவே பிரச்னைகளை எதிர்கொண்டு வாழ்வோம் என்று எண்ணித் தம் வாழிடங்களுக்குத் திரும்பின. பிரச்னைகள் எல்லோருக்கும் உண்டு என்ற தெளிவு முயல்களைக் காத்தது.

இதையும் படியுங்கள்:
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!
Problems... sollutions!

பிரச்னைகளே இல்லை என்றால் வாழ்க்கை ருசிக்காது. உங்களுடைய பிரச்னைகள்தான் உங்களது வாழ்க்கை நகர்வதற்கு அல்லது முன்னேறிச் செல்வதற்கு வழிகாட்டுகின்றது. நம்மைவிடக் கஷ்டப்படும் மனிதர்களும் உள்ளார்கள் என்பதை எண்ணும்போது நமது வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றாது.

இப்பொழுது உங்கள் மனதில் தனி தெம்பு பிறந்திருக்குமே பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர பிரச்னைகளை கண்டு அஞ்சக் கூடாது என்று உணர்வு உங்களிடம் இருந்தாலேபோதும் எந்த பிரச்னையாக இருந்தாலும் சமாளித்து விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com