குறிக்கோள்தான் வாழ்க்கையை வெற்றியாக்கும்!

Motivation Image
Motivation Image

ம்மில் பலருக்கு குறிக்கோள் என்பது ஒரு சதவீதம் கூட இருப்பதில்லை ஆனால் குறிக்கோள் இல்லாமல் நாம் எதையுமே சாதித்து விட முடியாது என்பதுதான் உண்மை. நாம் குறிக்கோளோடு இருந்தால்தான் வெற்றியை வசமாக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளத்தான் இந்த பதிவு.

நம்முடைய கனவு மற்றும் கற்பனைக்குத் தெளிவான செயல் வடிவம் கொடுக்கும்போது  குறிக்கோளால் ஆகிறது.

நமக்கான குறிக்கோள் ஒன்றை வகுத்துக் கொண்டு அந்த இலக்கை அடைய நாம் வழி காணவேண்டும்.

`ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டு கொண்டு இருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்; அந்தக் கனவை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். நம் இலக்குகளில் இருந்து பின்னோக்கி நகர்த்த பல இடையூறுகள் வர நேரிடும். நம் கனவுகளையும் சாத்தியமாக்க முடியாமல் போகும்

குறிக்கோளற்ற வாழ்க்கை, நூலறுந்த பட்டம் போல, துடுப்பு இழந்த படகு போல, எந்தத் திசையில் வேண்டும் என்றாலும்  செல்லலாம். ஆனால், ஆசைப்படும் இலக்கை அடைய இயலாது.

என் குறிக்கோள் இதுதான்' என நமக்கு நாமே பிரகடனம் செய்யும் போது, அதை அடைவதில் முனைப்பும், மன உறுதியும் பிறக்கும்.

விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு, பல நூறு மைல்கள் தூக்கிச் செல்ல, ராக்கெட்டில் உள்ள எரிசக்தியைப் பயன்படுத்துவது போல, நம் குறிக்கோளை அடைவதற்கு உந்து சக்தியாக இருப்பது, அதன் மேல் வைத்து இருக்கும் தீவிர ஆசைதான்.

குறிக்கோளின் மீது நீங்கள் வைத்திருக்கும் ஆசை, உங்களை  ஓய்வெடுக்க விடாது, உறங்க விடாது. நீங்கள் எடுக்கும் முயற்சியில் அலுப்புத் தட்ட விடாது. எத்தனை மணி நேரம் உழைத்தாலும் சோர்வடைய விடாது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அவமானப்படுத்தினாலும், இளக்காரமாகப் பேசினாலும் மனதைத் தளர விடாது.

கனவுகளை சாதித்துக் காட்டிய பல சாதனையாளர்கள் இந்த உலகை இன்னும் ஆண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களின் வார்த்தைகளும், செயல்களுமே நமக்கு எப்போதும் உந்துதல் சக்தி ஆகும்.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலுக்கு இதம் தரும் காய்கறிகளின் ராஜா!
Motivation Image

அப்படி உங்களை ஈர்த்த தலைவர்கள், சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். அவர்களின் உழைப்பு, துயரங்கள், பொறுமை, அவமானம், இறுதியில் அவர்கள் எட்டிய வெற்றி போன்ற விதம் உங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

சோர்வாக இருக்கும்போது, அவர்களின் சாதனைகள், கடந்து வந்த பாதைகளை ஒரு முறை நினைத்துப் பாருங்கள். வாழ்வில் வெற்றி பெறக் குறிக்கோள் மட்டும் போதாது. அதை அடைய வேண்டும் என்ற தாளாத ஆர்வமும் இருக்க வேண்டும்.

எந்தச் செயலும், நம்மால் உறுதியாகச் செய்ய முடியும் என்று நம்முடைய மனதில் மேலோங்கி நிற்க வேண்டும். அந்த நம்பிக்கைதான் ''குறிக்கோளின் வெற்றி''யை நம் வசமாக்கும்’.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com