ரமதான் திருநாள் ஈகை பெருநாள்! நபிகள் நாயகம் சொன்ன 10 போதனைகள்!

ரமதான் திருநாள் ஈகை பெருநாள்! நபிகள் நாயகம் சொன்ன 10 போதனைகள்!
  • தன் பிழையை உணர்ந்து உண்மையாகவே வருந்துபவன் குற்றமிழைக்காதவனுக்கு ஒப்பானவன்.

  • வேலைக்காரன் உங்களுக்கு உணவு கொண்டு வந்தால் நீங்கள் உணவு உண்ண உட்காரும்போது அவனை அமர்த்திக் கொண்டு அவனுக்கும் கொடுத்து உண்ணுங்கள்.

  • நன்மை செய்பவருக்கு நன்மையும் தீமை செய்பவருக்கு தீமையும் செய்வோம் என்று எண்ணாதீர்கள். நன்மை செய்வோருக்கு நன்மை செய்வதாகவும் தீமை செய்தோர்க்கு தீமை செய்வதில்லை என்றும் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

  • வயது முதிர்ந்த பெற்றோரைப் புறக்கணிக்கும் இளைஞன் எவனும் சொர்க்கத்தை அடைய முடியாது.

  • நோன்பு ஒரு கேடயம். அதைக் கொண்டு ஒருவர் தம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

  • நற்செயல்களில் உறுதியாக நில்லுங்கள். தீய செயல்களை விட்டு விலகி இருங்கள்.

  • நல்ல முறையில் பழக தெரிந்தவனும் நற்குணம் உள்ளவனுமே நண்பர்களுள் சிறந்தவன்.

  • ஒருவர் தமது சகோதரரின் தேவையை பூர்த்தி செய்து வைக்க முயற்சிப்பாராயின் அதில் அவர் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அவரது குற்றங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.

  • தர்மம் செய்வது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். அதற்கு பொருள் இல்லாதவன் ஒரு நல்ல செயலாவது செய்யட்டும். அல்லது தீமை செய்யாமலாவது இருக்கட்டும்.

  • தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது. அதனால் தாயை வருந்த விடாதீர்கள்.

ஈகை பெருநாளில் நபிகள் நாயகம் கூறியுள்ள இந்த அருமையான 10 போதனைகளை பின்பற்றி வாழ்வோமாக.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com