இலக்கை நோக்கி பயணிக்கும் முன் இந்த 5ஐ படியுங்கள்!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

நாம் ஒரு இலக்கை நோக்கி பயணிப்போம். ஆனால் அந்த பயணம் பாதியில் தடைபடும் அல்லது முழுமை பெறாமல் முடிந்துவிடும். இது எதனால் தவறு எங்கே நடந்திருக்கிறது நாம் என்ன தவறு செய்தோம் எதனால் நாம் செய்த காரியம் வெற்றி பெற முடியவில்லை என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கும். 

 ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும்போது ஒரு சிலவற்றை மிக கவனத்தில் கொள்ள வேண்டியது நமது கடமை ஆகும். இலக்கை அடைய என்னதான் செய்யவேண்டும் என்று யோசிக்கும் உங்களுக்கு இதோ இந்த ஐந்து வழிகளை பின்பற்றுங்கள் போதும்.

1-உற்சாகம், உற்சாகம் தரும் வார்த்தைகள் : 

 உலகை ஆளும் தலைவர்கள் பலர் தன் அனுபவத்தின் மூலமாக பல கருத்துகளை அங்காங்கே தடம் பதித்துச் சென்றிருப்பார்கள். அது மற்றவர்களுக்கு மிகப்பெரும் உந்துதல் சக்தியாக இருக்கும். அப்படி எந்த தலைவரின், சாதனையாளரின் கருத்துக்கள் உங்களுக்குப் பிடிக்குமோ அந்த வரிகளை உங்கள் வீட்டின் எல்லா இடங்களிலும்; கண்களில் தென்படுமாறு ஒட்டி வையுங்கள். இவ்வாறு செய்வதால் நீங்கள் சோர்வாக இருக்கும்போது உங்களுக்கு உந்துதல் சக்தியாக இருக்கும்.

2-காரணங்களை பட்டியலிடுங்கள்:

இலக்குகளை எட்டிப் பிடிப்பது என்பது அத்தனை சாதாரணம் கிடையாது. அதற்கு பல நாட்கள், வருடங்கள் நீடிக்கும். அதற்காக பல இழப்புகளை சந்திக்க வேண்டும். அதுபோன்ற தருணங்களில் உங்களை எப்போது உற்சாகமாக வைத்துகொள்வது அவசியம். அதற்கு , நீங்கள் ஏன் அந்த இலக்கைத் தேர்ந்தெடுத்தீர்கள், இதனால் உங்களுக்கு என்ன பலன், அதற்காக உங்களின் உழைப்புகள் என்ன போன்ற காரணங்களைப் பட்டியலிடுங்கள்.  அந்த இலக்கை எட்ட ஒவ்வொரு படிகளாக திட்டமிடுங்கள். அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றுங்கள். நீங்கள் இழந்த இழப்புகள், எடுத்துக்கொண்ட காலம், தற்போது அதனால் அடைந்திருக்கும் மகிழ்ச்சி போன்ற விஷயங்களையும் எழுதி வையுங்கள். இவ்வாறு செய்வது அடுத்த படியை தொடங்க முன்னோடியாக இருக்கும்.

3-கடந்த கால முன்னோடிகள் : 

கனவுகளை சாதித்துக் காட்டிய பல சாதனையாளர்கள் இந்த உலகை ஆண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களின் வார்த்தைகளும், செயல்களுமே உந்துதல் சக்தியாகும். அப்படி உங்களை ஈர்த்த தலைவர்கள், சாதனையாளர் களின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். அவர்களின் உழைப்பு, துயரங்கள், பொறுமை, அவமானம், இறுதியில் அவர்கள் எட்டிய வெற்றி போன்ற விஷயங்கள் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மனோநிலையை மாற்றிக் கொண்டால் மகத்தான வெற்றி உறுதி!
Motivation article

4-இலக்குகளின் பிரதிபளிப்பு :

 வழிபாட்டு முறைகளில் கவனச் சிதறல்கள் இல்லாமல் இருக்க தியானம், அமைதி, அல்லது மெய்மறக்க வைக்கும் கடவுளின் உருவம் போன்ற விஷயங்களைப் பின் பற்றுவார்கள். அதுபோல் நீங்களும், எங்கெல்லாம் அதிக நேரம் செலவிடுகிறீர்களோ அங்கெல்லாம் அதன் பிரதிபளிப்பை தடம் பதியுங்கள். உங்கள் செல்ஃபோன், கணினி, பைக், பைக் கீ என எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் உங்கள் இலக்கை தடம் பதியுங்கள். அவற்றைப் பார்க்கும் ஒவ்வொறு நொடியும் உங்களுக்கு உந்துதல் சக்திதான். கவனச் சிதறல்களும் இருக்காது.

5-உடற்பயிற்சியும்/ யோகாவும் :

உடற்பயிற்சி மற்றும் யோகா உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தும். இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும். எப்போதும் உழைக்கும் உங்களுக்கு, ஒய்வையும், அமைதியையும் தரும். உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். அதனால் தவறாமல் உடற்பயிற்சி, யோகாவைப் பின்பற்றுங்கள்.

 ஐந்து விஷயங்களைப் பற்றி படித்திருப்பீர்கள் மனதில் உறுகேற்றிக் கொண்டு இனி எதை நோக்கி பயணிக்கிறீர்களோ பயணிக்கும் முன் இந்த ஐந்து விஷயங்களையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் இன்று மட்டுமல்ல என்றுமே வெற்றி உங்கள் வசம்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com