நாம் எந்த காரியம் செய்தாலும் முதலில் பயப்படுவோம் தயங்குவோம் இந்த இரண்டும்தான் நம் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுவது. எந்த ஒரு செயலையும் தயங்கி செய்யக்கூடாது அதேபோல் பயத்தையும் தூக்கி எறிந்து விடவேண்டும் இந்த இரண்டையும் செய்தால் எப்பொழுதுமே உங்கள் நண்பனாய் வெற்றி உங்களோடு இருக்கும்.
சிலர் எல்லாவற்றுக்கும் பயந்து பயந்து தயங்கி தயங்கி பல நல்ல வாய்ப்புகளை இழந்து என்னால் சாதிக்க முடியவில்லை என்னால் வெற்றியடையவில்லை என்று விரக்தியின் விளிம்பிலேயே இருப்பார்கள்.
சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். சிலர் இது நம்மால் சரியாக செய்ய முடியுமா என்று எண்ணி அதை செய்யத் தயங்குவார்கள். எதுக்குங்க பயம் தைரியமா செய்ங்க வெற்றி உங்கள் வசம் தாங்க. எதற்கும் பயப்படாதீங்க உங்களால் முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் அதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் எந்த பயமும் இருக்காது. தோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள். பயப்படுவதால் எதுவுமே நம்மால் சாதிக்க முடியாது. துணிந்து செய்யுங்கள் உங்கள் செயல்களை. வெற்றி உங்கள் வசம் தான்.
எந்த ஒரு செயலை செய்வதற்கும் பயந்து கொண்டே இருந்தால் வாழ்வில் வெற்றி அடைய முடியாது. உங்களால் இந்த விஷயத்தை செய்ய முடியுமா என்று கேட்டால் தன்னம்பிக்கையோடு என்னால் நிச்சயம் முடியும் என்று தயக்கமில்லாமல் சொல்லுங்கள். நாம் நினைத்தால் அகிலத்தை வெல்லலாம்.
சிலர் அவர் என்ன நினைப்பாரோ இவர் என்ன நினைப்பாரோ இதை செய்யலாமா வேண்டாமா இது செய்தால் தவறாகி விடுமோ இப்படி பயந்து பயந்து தயங்கி தயங்கியே அஞ்சு வாழ்கின்றனர் ஆனால் தயக்கம் இல்லாத மனநிலை பயமில்லாமல் மன நிலை இந்த இரண்டுமே பலம்தான் இவற்றை நாம் வளர்க்க வேண்டும்.
ஒரு மனிதனிடம் இருக்கும் பயம் ஒரு கட்டத்தில் அவனையே அழித்து விடும். ஒருவனுடைய தயக்கம் அவனை வளர விடாமல் தடுத்து விடும். எந்த ஒரு செயலையும் உங்களால் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். தயங்காமல் செய்து முடித்து வெற்றி வாகை சூடுங்கள்.
பயமும் தயக்கமும் இருந்தால் எந்த செயலிலும் நம்மால் வெற்றி பெற முடியாது. உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடு உங்கள் செயல்களைத் தொடங்குங்கள் பயத்தை தூக்கியெறியுங்கள் வெற்றி வேண்டுமா அப்போ பயத்துக்கும் தயக்கத்துக்கும் குட் பை சொல்லுங்க.
வாழ்க்கையில் நமக்கு எல்லா வாய்ப்புகளும் இருந்தும் நம்மை அது தேடி வந்தும் ஆனால் அதை நாம் பயன்படுத்தாமல் போவதற்கு மிக முக்கிய காரணம் பயமும் தயக்கமும் தான். சிலர் எல்லாவற்றிற்கும் துணிவார்கள் பயமில்லாமல் செயல்படுவார்கள் அவர்களை உற்று கவனித்து பாருங்கள் எதிலும் அவர்கள் தோல்வி அடைந்திருக்க மாட்டார்கள் அப்படியே ஏற்படும் சிறு தோல்விகளை கூட அவர்கள் அதைப் பற்றி யோசிக்கவும் மாட்டார்கள் அடுத்த கட்டத்திற்கு வந்து விடுவார்கள் அதை போல் நாமும் இருக்க வேண்டும்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் சக்சஸ் ஆக செய்துவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியும்
ஆனால் அதற்கு நம் கையில்தான் இருக்கிறது தயக்கமும் பயமும் எப்பொழுதுமே நமக்கு எதிரிகள் என்று நாம் நினைத்தாலே போதும் வெற்றி நம் வசப்படும்.