வெற்றி நிலைக்கத் தேவை வாழ்க்கை விதிமுறைகள்!

motivation image
motivation image


"Just because improvements aren't visible doesn't mean they aren't happening. You're not going to see the number change each time you step on the scale. You're not going to finish a chapter each time you sit down to write. Early wins come easy. Lasting wins require a lifestyle". James Clear.
முன்னேற்றங்கள் தென்படவில்லை என்பதனால் மட்டுமே எதுவும் நடைபெறவில்லை எனப் பொருளல்ல. ஒவ்வொரு முறையும் எடை இயந்திரத்தில் ஏறி நிற்கும் போதும் எண்களில் மாற்றம் காண இயலாது. ஒவ்வொரு முறை எழுத அமரும் போதும் அந்த அத்தியாத்தை எழுதி முடிக்க இயலாது. துரித வெற்றிகள் சுலபமாக வரும். காலங்கடந்து நிற்கும் வெற்றிகளுக்கு ஒரு வாழ்க்கை நடைமுறை தேவை." ஜேம்ஸ் கிளியர்.


வாழ்வில் வெற்றி என்பது அப்போதைக்கு ஆவென வியந்து பின் மறக்க செய்யும் துரித கால வெற்றியா அல்லது எப்போதும் நினைவு கூர்ந்து பாராட்டுத் தரும் நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டிய வெற்றியா என்பதை ஆராய்ந்து அதற்குத் தக்க வாழ்வின் விதிமுறைகளை அமைப்பது அவசியம்.


ஒரு கோபுரத்தின் மேல் ஏறுவதற்காக இரண்டு மாணவர்கள் போட்டி போட்டனர். அதில் ஒரு மாணவன் ஆவேசத்துடன் எதையும் பாராமல் கோபுரத்தில் கால்களை வைத்து சர்ரென்று உச்சிக்குப் போய்விட்டான் . மற்றொருவனோ நிதானமாக கால்களை வைத்து ஏற துவங்கினான். உச்சிக்கு போய்விட்ட மாணவன் கீழே பார்க்கிறான். வந்த வழி எதுவென மறந்து என்ன செய்வது என்று தெரியாமல் கீழே இறங்கும் வழி அறியாமல் பயத்தில் அலறுகிறான்.


நிதானமாக சென்ற மாணவனோ மேலே போய் அவனின் பயத்தை வெளியேற்றி அவனையும்  அழைத்துக் கொண்டு தான் வந்த வழியில் ஏற்கனவே பார்த்து வைத்த தடைகளற்ற வழியில் அவனையும் சேர்த்து கீழே கூட்டி வருகிறான். இப்போது இந்த இருவரில் யார் வெற்றி பெற்றவர்?

சரசரவென்று ஏறிய வழி எது என்று அறியாமல் மேலே சென்று பயத்தில் அலறிய அந்த மாணவனா அல்லது நிதானமாக அந்த கோபுரத்திற்கு செல்லும் வழிமுறைகளை கண்டு அதில் ஏறி சக மாணவனின் பயத்தைப் போக்கி கீழே அழைத்துக்கொண்டு வந்த மாணவன் புத்திசாலியா? அனைவரும் எளிதாக சொல்லிவிடுவோம் அந்த இரண்டாவது மாணவன் தான் வெற்றி பெற்றவன் என்று. இதைத்தான் அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் கிளியரும் சொல்லியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
மருத்துவமாகும் வாழை இலையின் மகத்துவம்!
motivation image

வெற்றியாளர்களை நன்றாக கவனித்துப் பார்த்தால் தெரியும். அவர்கள் தங்கள் வாழ்வில் கற்றப் பாடங்களின் பிண்ணனியில் நிதானமாக அலசி ஆராய்ந்து தங்கள் அன்றாட வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றிப் படிகளில் அழுத்தமாக கால் பதித்து ஏறுகின்றனர். உதாரணமாக ஒரு தொழிலதிபர் தினம் காலை உணவை முடித்து விட்டு பின் அலுவலகம் செல்லும் போது கால தாமதத்தினால் பல பணிகள் தன்னால் பாதிக்கப் படுவதாக உணர்ந்து காலை அலுவலகம் சென்று பணிகளை முடித்த பின் தனது காலை உணவை எடுக்கும் விதிமுறையை பின்பற்றினார். இதனால் முதலாளி வழி பற்றி தொழிலாளர்களும் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வரத் துவங்கினர்.


இது ஒரு சிறிய மாற்றம்தான். ஆனால் இதனால் விளைந்தது வெற்றி எனும் மாபெரும் விளைவல்லவா? ஆகவே நாமும் நிலைத்து நிற்கும் வெற்றிகளை நோக்கி நம் வாழ்க்கை விதிமுறைகளை மாற்றி வெற்றியை வசப்படுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com