Sadnessக்கும் Depressionக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. ஆனால், நாம் எப்போது வருத்தமாக இருந்தாலும் Depression-ஆக இருப்பதாகவே சொல்வோம். ஆனால், இந்த வித்தியாசம் தெரிந்தால் இனி அப்படி சொல்லவே மாட்டீர்கள்.
நமக்கு பலவிதமான உணர்ச்சிகள் ஏற்படும். அதில் முக்கியமானவை மகிழ்ச்சி, துக்கம். நாம் ஒரு சில மணி நேரம் காரணமே தெரியாமல் சோகமாக இருப்போம். சில நேரத்தில் காரணங்களோடு சோகமாக இருப்போம். உடனே யாரிடமாவது பேசத் தோன்றும். அப்படி பேசிய பின்னர் சரியாகிவிடும். அப்போது நாம் என்ன சொல்வோம் சில மணி நேரம் நான் depression லிருந்தேன் என்று. ஆனால், சில மணி நேரம் இருப்பது depression அல்ல. அது sadness.
Sadness Vs Depression:
Sadness என்றால் சோகம். Depression என்றால் மனச்சோர்வு. சோகம் என்பது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும்தான் இருக்கும். இதிலிருந்து எளிதாக வெளிவந்துவிடலாம். நமக்குப் பிடித்த நபர்களிடம் பேசினாலோ அல்லது பிடித்த செயல்களை செய்தாலோ சோகத்திலிருந்து விடுபெற்று சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம்.
மனச்சோர்வு வந்தால் அவ்வளவு எளிதாக போகாது. நீண்ட நாள் அதாவது மாதக்கணக்கில் இருக்கும். இரவில் நிம்மதியாக தூங்கமுடியாது. நமக்கு பிடித்த விஷயங்கள் கூட அப்போது நமக்கு பிடிக்காமல் போகும். தனிமையில் இருக்க தோன்றும். எந்த வேலையும் செய்யாமல், எதையாவது நினைத்துக் கொண்டே இருக்கத் தோன்றும். ஆனால், மனச்சோர்விலிருந்து வெளிவர வேண்டுமென்றால் முதலில் நீங்கள் மன சோர்வில் இருக்கிறீர்களா அல்லது சோகத்தில் இருக்கிறீர்களா என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மனச்சோர்விற்கான அறிகுறிகள்:
1. இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அது மனச்சோர்வு.
2. வாழ்க்கை மிகவும் கடினம் என்று உணரவைக்கும்.
3. மனச்சோர்வு உங்கள் பணிகளை பாதிக்கும். (அதாவது தொழில்சார்ந்த பணிகள்)
4. சுயதீங்குகளை அனுபவிக்கத் தோன்றும்.
5. பசியின்மை மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படும்.
இந்த அறிகுறிகள் தென்பட்டவுடனே நீங்கள் செய்ய வேண்டியவை:
1. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை நிறுத்துங்கள்.
2. நீங்கள் வாழ்நாளில் அதுவரை செய்த சாதனைகள் குறித்தும் செய்த பெருமைக்குறிய விஷயங்கள் குறித்தும் எழுதுங்கள், நினைவுக்கூறுங்கள்.
3. உங்களுக்கு நீங்களே கடினமாக இருப்பதை நிறுத்துங்கள். அதாவது இன்னும் இலக்கை அடையவில்லையே என்று கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.
4. அதேபோல், உங்களுக்கு எந்த ஆடையை அணிந்தால் சுயநம்பிக்கை வருகிறதோ அதை அணியுங்கள். உங்களை கவனித்துக்கொள்வதில் முன்னுரிமை செலுத்துங்கள்.
5. படங்கள் பாருங்கள், பாடல்கள் கேளுங்கள். சுவாரஸ்யமான செயல்களில் ஈடுபடுங்கள்.
இவற்றை செய்தால் மனச்சோர்வுக்குள் போனவுடனே வெளிவந்துவிடலாம்.
கவனத்தில் கொள்ளுங்கள். சோகத்தைவிட இந்த மனச்சோர்வு மிகவும் மோசமானது. உயிரையே கூட பறிக்கலாம்.