தங்கத்தால் சாதிக்க முடியாததை சங்கத்தால் சாதிக்க முடியும்!

team work...
dreams work...Image credit - pixaba
Published on

தங்கத்தால் சாதிக்க முடியாததை, சங்கத்தால் சாதிக்க முடியும்- வேதாத்திரி மகரிஷி. 

தாவது குழுவாக செயல்படுவதன் மூலம் செயற்கரிய காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். இதனைக் குறித்த ஒரு கதையைப் பார்ப்போம். 

முயலுக்கும் ஆமைக்கும் இடையே நடந்த ஓட்டப்பந்தயம்: 

நமக்கெல்லாம் முயலும் ஆமையும் என்ற கதை தெரியும். முயல் ஓடுவதில் திறமை பெற்றிருந்தாலும் முயலாமையினால் ஆமையிடம் அது தோற்றது. முயலுக்கும் ஆமைக்கும் ஓட்டப் பந்தயம் நடந்தபோது, முயல் ஆமையை குறைவாக மதிப்பிட்டது. முதலில் வேகமாக ஓடிய முயல் ஆமையின் கண்களில் இருந்து மறையும் தூரம் சென்ற பிறகு ஓய்வெடுக்க சென்றுவிட்டது. முயல் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆமை மெதுவாக அதனைக் கடந்து போட்டியின் வெற்றிக்கோட்டை தொட்டு போட்டியில் வென்றது 

இதுவரை நமக்குத் தெரியும். ஆனால் அதற்குப் பிறகு நடந்த மற்ற மூன்று ஓட்டப்பந்தயங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஓட்டப்பந்தயம் 2 – ஓட்டப்பந்தயத்தில் தான் ஆமையை விட திறமையாக இருந்த போதிலும், தான்  ஆமையைக் குறைவாக மதிப்பிட்டு தோற்றுப் போனதை உணர்ந்த முயல் ஆமையை இரண்டாவது முறை ஓட்டப் பந்தயத்திற்கு அழைத்தது. இம்முறை முயல் ஓய்வெடுக்கவில்லை. தொடர்ந்து ஓடி ஓட்டப்பந்தயத்தில் ஆமையை வெற்றி கண்டது. 

ஓட்டப்பந்தயம் 3- இரண்டாவது ஓட்டப்பந்தயத்தில் தோற்ற ஆமை முயலை மூன்றாவது ஓட்டப்பந்தயத்திற்கு வேறு ஒரு பாதையில் அழைத்தது. முயலும் ஆமையை வெற்றி கொண்டு விடுவோம் என்று வீறு கொண்டு ஓடியது. ஆனால் பாதையில் ஒரு நதி குறுக்கிட்டது.‌ நதியைக் கடக்க அங்கு எந்த ஒரு பாலமும் இல்லை. நதியை எவ்வாறு கடப்பது என முயல் விழி பிதுங்கி நிற்க, அங்கு மெதுவாக வந்த ஆமை நதியில் தாவி நீந்தி மறுகரைக்குச் சென்று வெற்றி கோட்டைத் தொட்டது.

ஓட்டப் பந்தயம் 4- இவ்வாறு மூன்று ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்ட முயலும் ஆமையும் நண்பர்கள் ஆகின. தனியாக முயல்வதை விட, ஒருவருக்கொருவர் உதவி வெற்றிக் கோட்டைச் சீக்கிரமாக அடைய எண்ணின. முன் குறிப்பிட்ட பாதையில் தரையில் ஓடியபோது முயல் ஆமையை முதுகில் சுமந்து ஓடியது. நதி குறுக்கிட்டவுடன் ஆமை முயலை முதுகில் சுமந்து நீந்தியது. மறுகரைக்குச் சென்றவுடன் மறுபடி முயல் ஆமையை முதுகில் சுமந்து ஓடி வெற்றிக்கோட்டை இரண்டும் சேர்ந்து ஒன்றாக அடைந்தன. 

இந்த நான்காவது ஓட்டப்பந்தயம் மூலம் முயலாலும் ஆமையாலும் தனியாக எளிதில் செய்ய முடியாத காரியத்தை ஒன்றுக்கொன்று உதவி எளிதில் செய்து முடித்தன. இதுதான் குழுவின் வெற்றியின் ரகசியம். ஆங்கிலத்தில், team work can make dreams work என்று சொல்வார்கள். அதாவது குழுவாக செயல்படுவது கனவுகளைச் செயலாக்கும்.

எனவே நாம் குழுவாக செயல்பட்டு வெற்றிமேல் வெற்றி பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com