வாழ்வின் அர்த்தத்தைத் தேடுங்கள்!

வாழ்வின் அர்த்தத்தைத்  தேடுங்கள்!

ங்கள் வாழ்வில் நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு வாழ்வின் அர்த்தம் தேடுவது அவசியம்.

உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செயல்கள் எவை, மிகவும் விருப்பமானவை எவை, எதில் ஆர்வம் என்று ஒரு பட்டியல் போடுங்கள்.

எந்தெந்த வேலைகளை விரும்பி செய்கிறீர்கள், எதைச் செய்தால்  உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்ற அடிப்படையில் பட்டியல் இருக்க வேண்டும்.

நீங்கள் எந்த செயல்களை அதிகம் விரும்புகிறீர்கள், யார் யாரை மனப்பூர்வமாக நேசிக்கிறீர்கள் என்று பட்டியல் போடுங்கள். அந்த நேரமே உங்களுக்கு மகிழ்ச்சி தருவது.

வாழ்க்கையில் உங்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர்கள் யார்?. அவர்களின் எந்தப் பண்பு உங்களை ஈர்த்தது? அதை பட்டியல் போட்டு அதையெல்லாம் நிறைவாக வாழ்ந்து சிலருக்கு நீங்கள் ரோல்மாடல் ஆகலாம்.

உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிக்கும் யாரோ ஒருவரை மட்டுமே சார்ந்திருக்காமல், உறவுகள், நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என எல்லோரிடமும் பழகுங்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் அவர்களும்  உங்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள்.

உங்களின் பலம் எது, பலவீனம் எது என்று மதிப்பிடுவதில் குழப்பங்கள் இருந்தால் நெருங்கிய நண்பர்களிடம் கேட்டு மகிழ்ச்சி தரும் செயல்களை செய்வதற்கு உங்கள் பலத்தைப் பயன்படுத்துங்கள்.

இலக்கை குறிவைத்து உங்கள் கண் எதிரே இருக்கும்  பல வாய்ப்புகள் தெரியும். முடிவுகள் எடுப்பதும் எளிதாகும். எதையும் தெளிவாக புரிந்து கொண்டு வாழ்வில் அர்த்தம் தேடி வெற்றி பெறுங்கள்.

-எஸ். மாரிமுத்து

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com