

மனிதன் தினசரி காலையில் எழுந்ததும் நேற்றைய கவலை சிந்தனை சந்தித்த சோதனை இவைகளை நினைத்து அசைபோடுவதே அவனது வெற்றிக்கான பாதையின் வழிகளை அடைத்துவிடுகிறது.
அன்றைய தினம் என்ன செய்யலாம் நேற்றைய தோல்விக்கு யாா் காரணம் என்பதை பூதக்கண்ணாடி ஆராய்ச்சி செய்வதை விடுத்து நம்மைநாமே சுயபரிசேதனை செய்து கொள்வதே நல்லது.
பொதுவாக எந்த விஷயத்திலும் யாரையும் சாா்ந்திருக்காமல் பலரிடம் யோசனை கேட்டாலும் இறுதி முடிவு எடுப்பது நமது கையில் இருக்கவேண்டும். தொியாத விஷயங்களை கேட்டுத் தொிந்து கொள்வதால் எந்த நஷ்டமும் வந்துவிடாது.
நமக்கு இது கிடைக்காது நமக்கு இது சரிபட்டு வராது என்ற எதிா்மறை சிந்தனைகளை கைவிடவேண்டும். இதைத்தான் காஞ்சி மகா பொியவர் தனது கருத்தாக "நமக்கானது எதுவும் நம்மைவிட்டு போகாது நம்மை விட்டுப்போனால் அது நமக்கானது அல்ல" என அவர் சொல்லியதுபோல நமக்கானது நம்மைவிட்டு அகலாமல் பாா்த்துக் கொள்ளவேண்டும். அதுதான் புத்திசாலிக்கு அழகு.
அதற்கு நமக்கு தேவை நல்ல சிந்தனை, நல்ல எண்ணம், நல்ல செயல்பாடுகள், நல்ல விஷயங்களையே மேற்கொள்ளுதல், நயவஞ்சக புத்தி கொள்ளாதது, இப்படி பல விஷயங்களைச் சொல்லலாம்.
பொதுவாகவே வாழும் வரை நல்ல உள்ளங்களையே சேகரிப்போம். மீண்டும் பிறக்கப்போகிறோம் என்பது நம்கையில் இல்லை, ஆக யாருக்கும் நண்பனாக இருக்கிறோமோ இல்லையோ விரோதியாக இருக்கவேண்டாமே!
வெற்றி தோல்வி வரத்தான் செய்யும் அது ஆண்டவன் விட்ட வழி, வெற்றி பெற்றுவிட்டோம் என்ற போதை தலைக்கு ஏறாமல் பாா்த்துக்கொண்டாலே தோல்வி நம்மைக்கண்டு தலை நிமிராமல் போகுமே! அதுதானே இயல்பான வாழ்க்கை முறை என்பதே நிஜம்.
"தளராத உறுதி மற்றும் நம்பிக்கையுடன் செயல்படும் எந்த மனிதனுக்கும் வெற்றி என்பது எட்டாக்கனி அல்ல, என ரிக்விட்டி" என்ற அறிஞர் சொல்லியுள்ளாா்.
அதன்படி நேற்றைய பாடங்களை அனுபவமாகக் கொண்டு இன்றைய வாழ்க்கையில் எடுத்து வைக்கும் காலடியை நிதானம் கடைபிடித்து, விடாமுயற்சி கைவிடாது, உழைப்பின் தன்மை உணர்ந்து, விவேகத்துடன் செயல்படுங்கள். அப்போதுவாழ்வில் விஸ்வரூப வெற்றி தானாகவே வந்துசேரும்.
எனவே யாரையும் குறை சொல்லாமல் வாழ பழகிக்கொள்ளுங்கள்.
அதுவே நிம்மதி தரும்! குறையொன்றும் இல்லை மறைமூா்த்தி கண்ணா என்ற மாமேதை சக்கரவர்த்தி நினைவில் வாழும் ராஜகோபாலாச்சாாியாா் அவர்களின் பாடல் வரிகளை மனதில் ஏற்றுங்கள் வளமாய் வாழுங்கள்! குறையேதும் இல்லை நாமாக குறை கண்டுபிடிப்பதே நல்ல செயலும் இல்லை.